உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

185

பையைப்பிடித்துக் கொண்டு வந்து வேலா முன் நிறுத்தி நிகழ்ந்ததைக் கூறினார். ஆசிரியர்க்கு முழுத்தலைக் குனிவாயிற்று. என்ன நிகழுமோ என அஞ்சி நாணினார். "ஏன் இவ்வாறு செய்தீர்கள்? ஓர் ஆசிரியர் இவ்வாறு செய்யலாமா? என்றார். ஆசிரியர் இவ்வாறு செய்யலாமா?" அந்தப் புத்தகங்கள் என் தேர்வுக்கு வேண்டியிருந்தன; பணம் இல்லாமையால் அவ்வாறு செய்து விட்டேன்; பெருத்த தவறுதான்; பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்; கையெடுத்து வணங்கினார்.

C4

"இனி இப்படிச் செய்யாதீர்கள்; முடியாத நிலை இருந்தால் அதனைச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்; நான் தட்டாமல் தருகிறேன்" என்று சொன்னார் வேலா. அவர் எடுத்துச் சென்ற நூல்களில் "அன்பளிப்பு' என எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார்.

பிரான்சு நாட்டு விக்டர் கியூகோவின் வெள்ளி விளக்குத் திருத்தந்தையார் செயலுக்கும் வேலா செயலுக்கும் வேற்றுமை உண்டா?

பழையபெட்டி :

க்

ஒருநாள் வீட்டில் வெள்ளையடிப்பு நடந்தது. வழி பாட்டறையில் ஒரு பெட்டி இருந்தது. அது சாதிக்காய்ப்பலகைப் பெட்டி; பழமையானது. அப்புறப்படுத்த வேண்டி அப்பழம் பெட்டி அங்கே கிடப்பானேன்? ஒழுகறைப் பெட்டிகளுக் கிடையே அப்பெட்டி ஏன்? என்று எண்ணிய அரசமாணிக்கர் வெளியே எடுத்துப் போடுகிறார். தந்தை வேலாயுதனார் காண்கிறார். அதனைத் துடைத்து மீண்டும் அவ்விடத்தே வைக்கிறார். இப்பெட்டியை அப்புறப்படுத்தலாமே எனத் தந்தையாரிடம் கூறுகிறார். என் தொடக்கக்கால வணிகத்தை எடுத்துக் காட்டும் நினைவுச்சின்னம் அது; நம் வணிக வளத்தின் 'மூலபண்டாரம்' அதுவே! என்னை என் பழமை நினைவு மாறிவிடாவகையில் காத்து வரும் கலைப் பொருள் அதுவே " என்னை என்பதைக்கூறி அப்பெட்டியே தாம் முதற்கண் முதிய வணிகர் ஒருவரிடம் வாங்கிய பாடற் புத்தகங்களின் வைப்பயகமாக இருந்ததனை விளக்கினார்! தந்தையார் உணர்வுக்குத்தலை வணங்கிய தகவார்ந்த அரச மாணிக்கர் இன்றும் அப்பெட்டியை அவ்விடத்திலேயே வைத்துப் போற்றி வருதல் தந்தைவழி மைந்தர்வழி என்பதற்கு மெய்ச்சான்றாகும்!