உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

நூற் கொடை

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

சென்னை சுவாகத்து விடுதியில் தமிழ்நாட்டு எழுத்தாளர் கழகச் சார்பில் ஒரு நூல் வெளியீடு. ஆசிரியர் மெர்வின் என்பார் எழுதியது. வெளியிட்டு விழாவில் ஒருநூல் கூட விற்பனையாக வில்லை. வேலா மனம் எழுத்தாளர்பால் அன்பு கொண்டது. அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என உந்துதல் ஆனது. அதனால் பத்து உருபா விலையுடைய அந்நூலில் 50 படிகளை விலைக்கு வாங்கி அங்கு வந்திருந்த ஒவ்வொருவர்க்கும் தம் அன்பளிப்பாக வழங்கினார். நூலாசிரியர்க்கு ஊக்கம் உண்டாக்கியதுடன். நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவார் கடமை என்ன என்பதையும் உணர்த்துவதாக இருந்தது அந்நிகழ்ச்சி.

முகத்துக்கு முகம்

முகம் முப்பெரு விழா 16-5-90 இல் சென்னை பாவாணர் நூலகத்தில் நிகழ்ந்தது. அதில், முகம் மாமணி இளைத்துக் கொண்டே போவதாக மன்னர் மன்னன் குறிப்பிட்டார். 'அவரை இளைத்துப் போகவிட மாட்டோம்; அவர் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை நாம் பார்த்துக் கொள்வோம் என்ன?" என்று முனைவர் வாசவன் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டதும், குறளியம் வேலா முகம் வளர்ச்சிக்கு உருபா 500 கொடுத்தார். வாசவன் தொடர்ந்து வேலா குறள் காட்டிய அறநெறியில் ஈட்டிய பொருளை ஈகின்றார். அவர் தமிழகத்தைக் குறளகமாக மாற்றப் பாடுபட்டு வருகிறார் அவருக்கு நாம் துணையாக இருப்போம்" என்றார். மேலும் நாரணதுரைக் கண்ணனார் எழுத்தாளர்களுக்குப் புகலிடமாக இருந்ததை விளக்கிய போது வேலா, நாரண துரைக்கண்ணனார்க்கு உருபா 500 நன்கொடை வழங்கினார். கைம்மாறு கருதாக்கடப் பாட்டுக் கொடைகள் ன்ன பலவாம்.

அன்பளிப்பு :

வேலா புத்தக அங்காடிக்கு ஓர் ஆசிரியர் வந்தார். அவர் நெடுநேரம் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். பின்னர் விலைமிக்க சில நூல்களைப் பிறர் அறியாவண்ணம் எடுத்துப் பையில் மறைத்துக் கொண்டு எதுவும் வாங்காதவர் போல் வெளியேறினார். அவர் செயலைக் கூர்ந்து கண்ட கருத்துமிக்க கடையாள் ஒருவர் பின் தொடர்ந்து, கடை வாயிலிலேயே