உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

187

இந்நல்லதைக் கொள்ளுகிறேன்" என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அகவை கூடக் கூட, அல்லவை படிப்படியே தள்ளப்பட்டு நல்லவை கொள்ளப் பெற்று முழுமாந்தன் ஆக உதவும். அவ்வகையில் “இவ்வாண்டுப் பிறப்பு முதல் இத்தீயதைத் தள்ளுகிறேன் இந்நல்லதைக் கொள்ளுகிறேன்" என்று திட்டப் படுத்திக் கொண்டு வாழ்த்துப் பெறவா என்றார் வேலா. இவ்வாறு சிந்திக்கத் தூண்டிச் செயலாக்கச் செம்மைக்கு ஆட்பட்டவர் வேலா. ஆதலால், அம்முறையைப் பட்டறிவால் அழுத்தமாகக் கூறமுடிந்ததாம்.

வேலைநீக்கமா? குறை நீக்கமா?

வேலா வணிக நிறுவனத்தில் பணியாள் ஒருவர். அவர் வெளியே வாங்கி வரும் பொருள்களில் சற்றே விலையேற்றிக் கூடுதல் தொகை பெற்று வருதல் குறிப்பாக அறிய வந்தது. அதனைத் தெளிவாக அறிந்த பின், நிறுவன மேலாளர் அப் பணியாளரை 'உரிமையாளர் ஒப்புகை இல்லாமல் பணிக்கு வரக்கூடாது' என்று கூறி அனுப்பி விட்டார்.

பணியாள் உரிமையாளரைப் பார்த்தார். உரிமையாளர் வேலா,உண்மையை உசாவிக் கண்டு பிடித்தார். மறுக்க முடியாத சான்றுகளைக் காட்டி மெய்ப்பித்துத் தவற்றினை ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கினார். குற்றத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் தமக்கு இனிவேலை கிட்டாது என எண்ணினார் பணியாள்.

பணியாள் பொய்யுரைத்துப் பெற்றுக் கொண்ட உருபாவை வேலா கொடுத்தார். இதனைக் கொண்டு போய், நான் வாங்கிய இந்த இரண்டு பொருள்களிலும் கூடுதல் சொல்லி இதனை வாங்கி விட்டேன். இதனைச் செலுத்தி விடுகிறேன். இனிமேல் இத்தகைய தவறு செய்யமாட்டேன். பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டுக் கடைக்குப் போ என்றார்.

குற்றத்திற்கு வேலை நீக்கம் செய்வது வேலா நோக்கமன்று குற்றத்தை நீக்க வேண்டும் என்பதே வேலாவின் நோக்கு வேலாவே கடைக்குப் போ என ஆணையுட்டிருக்கலாமே! மேலாளர் வழியே செல்ல வேண்டுமா எனின் முறையைப் போற்ற வேண்டுமே; அதுவே அவர் நோக்கமாம்.