உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. உரை வீச்சு

இந்நிலை என்று மாறும்?

இன்று நாம் செய்யவேண்டியது திருக்குறளின் மெய்யுரை கண்டு உலக மொழிகளில் எல்லாம் மொழியாக்கம் செய்தல் வேண்டும். விளக்க முறைகளால் குறளியக் கோட்பாடுகளைப் படைத்தல் வேண்டும்.

ஆனால் இன்று நாம் உண்மை தெரியாமல் உலகெல்லாம் திருக்குறள் பரவிவிட்டது எனத் தவறாகக் கருதிக் கொண்டு ள்ளோம். ஒவ்வொரு மொழியிலும் ஒரு சில ஆயிரம் படிகளே வெளியிட்டுள்ள இன்றைய நிலை கடலில்கரைத்த பெருங்காயம் போலத்தான்.

எதை எதையோ இலட்சக் கணக்கில் அச்சிட்டு இலவயமாக வழங்க இந்நாட்டில் பலர் உள்ளனர். ஆனால் வாழ்வியலை வகுக்கும் திருக்குறளை அச்சிட்டு வழங்கத்தான் ஆளில்லை; அமைப்பு இல்லை. என்று இந்நிலை மாறும்? (1-1-1981)

ஆறாத் துயரை ஆற்றல்

தமிழுணர்வோடு,அறிவோடு அகர முதலியை ஒழுங்கு படுத்தித் தொடர்ந்து வெளியிட்டு முடிக்கும் பணியை மேற் கொள்ளும் பெருமக்களாலோ, அரசாலோ தான் பாவாணரின் மறைவால் உற்ற தமிழன்னையின் ஆறாத் துயரை ஆற்ற முடியும்,

(1-1-87)

கண்ணிமை போல் காக்க

கொத்தளம் ஏறியும் கொத்தடிமை ஆயினரே என்ற அவச் சொல்லுக்குத் தமிழக அரசு, வரலாற்றில் இடம் பெறக் கூடாது. காமராசர் பக்தவச்சலம் ஆட்சி கூடத் தந்தை பெரியாரைக் கண் மை போல் காத்ததை மறத்தல் கூடாது.

தமிழக அரசு, விலைமதிப்பற்ற வீரமணி (தி.க. பொதுச் செயலர்) அவர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்! (1-8-82)