உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்புற்றெழுக

ஈரோடு வேலா (வரலாறு)

189

தமிழ் நாட்டில் வாழ்பவர் -வாழ நினைப்பவர் தமிழ் கற்றாக வேண்டும். தமிழே பயிற்று மொழி தமிழ்வழிக் கல்வி கற்பிக்காத பள்ளி தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது. எங்கும் எதிலும் தமிழே இருக்க வேண்டும். இவ்வேண்டுகோளைத் தமிழக அரசிடம் ஒப்புவிக்கிறோம். நிறைவேறுமா? மொழிப் பற்றெங்கே? விழிப்புற்றெழுக! (1-10-82)

ஒதுங்காதீர்

ஆசிரியப் பெருமக்களே ஒதுங்காதீர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியாலும் அலங்காரப் பேச்சாலும் பெற்ற கையூட்டுப் பணக்குவியலாலும், அடியாட்களாலும், பரம்பரைப் பதவிப் பிறப்பாலும், இந்நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைபவர் எவரையும் ஆளவையில் இருக்கவிடக் கூடாது. இத்தகு உணர்வுகளைச் சிந்திக்கக் கூடிய குமுகாயத்தை உருவாக் குங்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பசி நீக்கிப் பகுத்தறிவை வளருங்கள் (1-11-82)

அரசுச்சட்டம்

தமிழை வளர்க்கப் பல்கலைக் கழகங்களோ, உலகத் தமிழ் மாநாடுகளோ செய்யும் பணிகளை விடத் தமிழுக்கே எதிலும் எங்கும் முன்னுரிமை என்ற அரசுச் சட்டம் எல்லா நிறைவு களையும் செய்துவிடும். தமிழுக்கு முன்னுரிமை வேண்டும். தமிழக முதல்வர் செய்வாரா? (1-6-83)

குறை யாரைச் சாரும்

இன்றோ பெரும்பாலான தமிழாசிரியர்கள் ஏனோ மொழி நலம் பேணாது, வளர்க்காது, போதும் என்ற பொன்மனம் கொண்டு வாளா விருக்கின்றனர். துறைதோறும் செல்லாமலும், சொல்லாக்கந்தராமலும் உள்ள குறைவு தமிழாசிரியர்களை அன்றி யாரைச் சாரும? தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களே எல்லாத் துறைகளிலும் கோலோச்சுங் காலம்வரல் வேண்டும். வந்தால் நம்மை ஏமாற்றுவோர் வாழ மாட்டார்; வாழ முடியாது.

(1-10-83)