உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

நீ

நான்

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நீ - நான்

ஓஓ! தமிழின் தலைவா!

தமிழினத் தலைவா!

உலகெலாம் உன்மொழி புகழுறவே,

திருக்குறளை உன்

தமிழில் தந்தாய்!

நீவாழ்ந்த காலத்தில்

உனக்குத்தான்

எத்தனை அயல் நண்பர்கள்?

நீ கற்ற மொழிகள் எத்தனை? ஆனால்., எதற்கும் நீ

அடிமை யாகாமல்

எங்கெல்லாம் எது கிடைப்பினும்

கண்டறிந்தாய்

அல்லன நல்லன ஆய்ந்தாய் நீ,

புதியன புகுத்தித்

திருக்குறளை யாத்தாய் நீ;

அதைக் கற்கவன்றோ

உலக அறிஞர்கள் உன்னாட்டில் வலம்

வந்தார்; வருகிறார்; வருவார்.

உன் குறளை அறிந்தவரோ

என்றன் நாட்டை நோக்குகிறார்.

ஆனால், நானோ...நானே...

விடுதலை பெற்ற என்றன் நாட்டில்

சோற்றுக்கு வாழ