உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

7

துளிகள்! எளிமையில் பிறந்து எளிமையில் வளர்ந்து எளிய தொண்டனாக வாழ்பவனும் வரலாற்று உலகுக்கு வேண்டும் ஒரு சிறு வளத்தை வழங்க முடியும் என்பதற்கொரு சான்று!

'திருக்குறள் நம்மறை' என்னும் கொள்கையில் ஊன்று நின்று வாழ்வியல் மேற்கொள்ளும் பேறு வாய்த்தது எம் பிறப்பின் பெரும்பேறு!

தமிழ்வழிக் கல்விக் கொள்கையில் யாம் ஈடுபட்டுப் பாடுபட நேர்ந்துள்ளமை மற்றொரு பெரும்பேறு! இவற்றினும் உயர் பேறு உண்டோ? இப்பேற்றைக் கொண்டபேறைக் கொண்ட பேற்றைக் காட்டவே இவ்வரலாறு எபந்ததோ? அன்றி எழுதத் தூண்டியதோ! நான் படித்துச் சுவை கண்ட செய்திகளை நீங்களும் படித்துச் சுவைக்க வேண்டும் என்பதற்கே இந்நூல் வெளியீடு! 'எனைத்தாக' இருப்பினும், 'அனைத்தாக' நலந்தானே!

இந்நூலை இவ்வழகிய வடிவில் அச்சிட்டுத் தந்த அருமையர் மூவேந்தர் முத்து ஆவர். அவர்க்கு நன்றி உடையேம்.

ஈரோடு

7-7-90

}

வேலா அரசமாணிக்கம்