உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

என் பேச்சிற்கும் மூச்சிற்கும் உற்ற வாழ்க்கைத் துணை நலமாக யான் பெற்ற சந்திரா அம்மையார், கொடிப் பெயர் மக்கள் மூவர், இனிய மருகர் சக்திவேலர், வளர்மகன் செந்தில் ஆகியோர் எம் பணிவளர்ச்சிக்கு ஊற்றங்கால்ளாக அமைந்தவை எம்பேரா கூழாகும்.

மொழியால், மதத்தால், சாதியால், கட்சியால், உடையால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் சிதைவுற்று மாறித் தன்னை மறந்து போனது தமிழினம். அது தன் மேம்பட்ட நிலைகளைக் கண்டுணரவும் முடியாத தாழ்நிலைக்கு ஆட்பட் டுள்ளது. திருக்குறள் வழிக் குமுகாயமும். திருக்குறள் வழி அரசும் என்று அமைகின்றனவோ அன்று தான் தமிழ் கோலோச்சும்; தமிழ்நெறி கோலோச்சும்; நம் மறை உலகு ஆளும்! இவையே நம் முடிபுகள்!

எம்

இத்தகு நெடுவழிப் பேருலாவைத் தொடங்கியுள்ள எளிய எமக்கு ஒரு வரலாறு அரும்புவதை எளிய எம் உளம் ஒப்ப வில்லை; அஞ்சியது. எனினும் அன்பும், செந்தமிழ் அறிவும், வழிகோலிய தெய்வமும் எம் உறுதியைத் தளர்த்தின. தந்தையார் அ. வேலாயுதனார் மறைந்த பின் அவர் பெட்டிகளைச் சரி பார்த்தபோழ்து அழகிய கட்டமைப்புக் கொண்ட அருமைக் குறிப்பேடு ஒன்று காணப்பட்டது. அதில் 'வேலா குடும்ப வரலாறு' று எனத் தலைப்பிட்டுச் சில பக்கங்களும் அரிய குறிப்பு களும் பொறித்திருந்தார். தம் குடும்பங்களைப் பற்றிய முன் பின் செய்திகளைச் சேர்க்க அவாவியிருந்தார். அவர் கனவு நனவாவதென என்னையும் அறியா இறும்பூது எய்திற்று.

ஆம்!.தமிழ்ச் சான்றோர் இளங்குமரனார் சிந்தனையில் பட்டவை பலப்பல, நமக்கும் வழிவழி மக்களுக்கும் வயிரமணி களாகி வருகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் யாத்தவர்; குண்டலகேசி படைத்தவர்; இலக்கண வித்தகர்; சொல்லாய் வறிஞர்; பெரும் பாவலர்; உரைவல்லார். அவர் எம் வரலாற்றையும் வரைந்தார். நான் வியந்தேன். எம்மையும் தம் எழுத்தால் வரலாற் றாளனாகச் செய்துள்ள செந்தமிழ்த் திறங்கண்டு, தமிழன்னை காலம் காலமாகப் பெற்று வரும் நன்மகப் பேற்றின் அருமை உணர்ந்தேன்; உவந்தேன்.

என் வரலாறு மட்டுமா இது! எங்கள் குடும்ப வரலாற்றின் ஒரு துளி! திருக்குறள் இயக்க வரலாற்றின் ஒரு துளி! நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நெறிகளின் முகைளின் சிலச்சில