உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

5

பட்டேன்; "பொதுமறை எனக் கொண்டால் பலரும் ஏற்பர்; நம் மறை என்பதால் இற்றைச் சூழலில் பெயரும் புகழும் பொருளும் பிறவும் எய்துதல் இயலா" என்று நன்றுரைப்பார் போல் உரைத்து நழுவிக் கொண்டனர்.

காலத்தை ஒட்டிப் பிழைப்பவர்களே மிகப் பலர். காலத்தை வென்று வழிகாட்டுவார் மிக அரியர். அவர்கள் நாளையுலகில் ஈகியராய் எண்ணப்பெறினும் நடைமுறையில் நலிக்கப்படுவர்; இது வரலாற்றுச் சான்று. இந்நிலை, எளிய எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளமை அறிகின்றோம். எனினும், சிலச் சிலர் சிந்தனைக்கு இடமாகி வரும் பேறு வாய்க்கும் போதெல்லாம் அஃது உயிர்க்கு ஊதியமாகவே தோன்றுகிறது.

தெய்வம்

வாழ்வாங்கு வாழும் வணக்கத்திற்கரிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அமரர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆகிய பெரு மக்கள், எம்மையும் திருக்குறள் நம்மறை என்றும் கொள்கை யினரையும் வரவேற்று, நம் பாதையே செம்பாதை, செந்தமிழ்ப் பாதை எனக் கூறி வழிகோலியமை எமக்கு உண்டாகிய எதிர்ப்புகளை எதிரிட்டுச் செல்லும் துணிவையும் உறுதியையும் வழங்கின.

சங்ககாலச் செந்தமிழ்ச் சான்றோர் இன்றும் உளர் என்ப தற்குச் சான்றாக நாளும் வாழ்ந்து, எம் சிந்தனை கட்கெல்லாம் விருந்தாகும் இலக்கியச் செம்மல் மதுரை இளங்குமரனார்; 'இனி எம் வாழ்நாளெல்லாம் குறளிய குறளாயத் தொண்டுக்கே' எனப் பெருந்துணையாகிய பெரும்புலவர் பட்டுக்கோட்டை மீ. தங்கவேலனார்; செம் பொருள் நுகர்வே இறைவழி பாட்டிற் குரிய இனியவழி என்பதன் சான்றாகிய - புலவர்குழு உறுப்பினர் தனித்தமிழ் அரிமா -சித்தோட்டுப் பாவலர் ஈவப்பனார்; 'இயற்கையே இறை; திருக்குறளே நம் மறை' என வாழ்ந்து திருக்குறள் வழியிலேயே திருமணம் முதலிய சடங்குகளையும் பணிகளையும் நடத்தி வரும் புரட்சிக்கனல் திருவள்ளுவர் குருகுலம் கு. இரகுபதி; 'திருக்குறள் குமுகாய மலர்ச்சியே எம் குறிக்கோள்' என ஓயாமல் ஒழியாமல் கடனாற்றி வரும் படைமேல்நர், திருவண்ணாமல த. சாமிநாதன் ஆகியோரும், தொண்டுள்ளத்துடன் ஊற்றமாகக் குறளாயப் பணியில் தம்மை ஆட்படுத்திக் கொண்டு நெஞ்சார்ந்த கடனாற்றி வரும் ம் நேயத்தினர் பலப்பலரும் செய்து வரும் திருக்குறள் பணிகள் இந்நூற்றாண்டுப் புகழ் வரலாற்றின் ஒளிமிக்க வரிகளாம்.