உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றாளர் வரைவு

யான் எளியன்; அது மட்டுமன்று; கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவற்றில் முறையாக முழுமையாக திட்டமிடப்பட்டுக் குற்றுயிராக்கப்பட்டுப் பட்டுப் போன சில பல தலைமுறைகளின் அடிவாழை! தந்தை பெரியாரால் புத்துணர்வு பெற்ற தமிழ்நாட்டினருள் -அவர் தம் கருத்துகளைச் சிக்கெனப் போற்றிக் கொண்டவருள் - நாடளாவியிருந்த எங்கள் சுற்றத்தார் முதன்மை உற்றனர்.

எங்கள் குடும்பங்களில் வழிவழியாக விளங்கி வந்த வேத மறுப்புக் கொள்கை, கடவுளர் பலர் என்பதன் மறுப்புக் கொள்கை, உழைப்பு, அன்பு, அருள், அறம் என்பனவே வாழ்க்கையின் குறிக் கோள்கள் என்னும் வாழ்வியல் கொள்கை, சிவம் என்னும் பேரா இயற்கையே கடவுள் நிலை என்னும் இறைமைக் கொள்கை ஆகியவற்றைக் கொண்ட வீர சைவத்தை மீளவும் ஆழ்ந்து நோக்கவும் தன்மானத்தை மீளவும் பெறவும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் எங்களுக்கு உந்துகோலாய் அமைந்து உயர் வழிகாட்டி ஆயின. இவற்றின் விளைவே, 'திருக்குறள் நம்மறை' என்னும் முடிபும் முழக்கமும் ஆயின.

-

மறை என்பது பழஞ்சொல்.பாதுகாப்பு என்னும் பொருளது. நமக்குப் பாதுகாப்பாம் நூல் தமிழில் இல்லையா? மறை நூல் நமக்கு இல்லையா? திருக்குறள் நம் மறையாகாதா? பொதுமறை, தமிழ்மறை எனப்படும் அது நம் மறையாகாதா? என்னும் வினாக்கள் அடுக்கடுக்காய் எம் நெஞ்சில் பல்கால் எழுந்தன. திருக்குறள் நமக்கு எத்தகு பாதுகாப்பு அருளும் நூல்! ஏன் நமக்கு மட்டுமா? மன்பதை முழுமைக்குமே பாதுகாப்பு அருளும் நூல் அல்லவோ! என்னும் நயனார்ந்த உண்மை எம் நெஞ்சை வருட வருடப் பிறந்ததனவே - குறளியமும்; குறளாயமும்; திருக்குறள் நம் மறை என்னும் குறிக்கோளுமாம்!

'திருக்குறள் நம் மறை' என்பதைப் பலாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அவர்களால் மாறுபார்வை பார்க்கப்பட்டேன்; புறந்தள்ளவும்