உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

இதுவோ இன்றைய நிலை

சை : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆடுவோமே-பள்ளுப்பா

எடுப்பு

பாடுவோமே துயர் பாடுவோமே

பாழுஞ் சனாதனம் பரவியதேயென்று - பாடு

தொடுப்பு

பார்ப் பானை அய்யரென்ற காலம்வந்தது பாரில் அதை வளர்க்கச் சங்கம் வந்தது ஏய்ப்பார்க்குக் கால்பிடிக்கும் காலம் வந்தது ஈனருக்கு ஏவல்செய்யும் நாளும் வந்தது. (பாடு)

முடிப்பு

எல்லோரும் ஒன்றெனும் காலமும் எங்கே

ஏமாற்றும் பொய்யருக்குக் காலமும் இங்கே நல்லோரைப் பெரிய ரென்னும் காலமும் எங்கே அன்புள்ள தொண்டருக்குத் துன்பமும் இங்கே. (பாடு) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை எங்கே உண்டுகளித் திருப்போர்க்கு வந்தனை இங்கே விழலுக்கு நீர்பாய்ச்சி மாய்ந்து போனோம்

வீணருக் குழைத்துடலும் ஓய்ந்து போனோம். (பாடு)

நாமிருக்கும் நாடுநம தென்பதெப் போது நமக்கெல்லாம் உரிமையாய் ஆவதெப் போது பூமியில்சிலர்க்கு நாம் அடியானோம்

பொதுமைப் புதுவிதிகள் காண்பதெப் போது. (பாடு)

201

குறளியம் : 1-8-82