உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நம் மறை - நெறி

என்பதனால்

நாம் பெறும் தெளிவுகள்

திருக்குறள் அடிப்படைச் சிந்தனைகளை வழங்குகிறது. திருக்குறள் மாந்தரை மாந்தராக வாழ வைத்து, அறிஞராக்கித் தெய்வமாக வழி கோலும்.

திருக்குறள், குடும்பத்தை முதல் அடிப்படைத் தொகுதி யாகக் கொண்டு, அறஞ்சார்த் தியங்கும் குமுகாயத்தைப் படைக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களும், வாழ்பவர் களும் தெய்வங்கள். இந்த உருவ வழிபாடுகளே அடி தொழலுக்கும், சேர்தலுக்கும், பின்பற்றற்கும் கருப்பொருளாகும்.

இறைமை (கடவுள்) உணர்வு பெருமைக் குரியது. அறிவும், உணர்வும் மிக்குற்ற காலை தோன்றும். 'ஆரா இயற்கையாய் அவா நீப்பின் வருவது இறைமை நிலை, இறைமை தனியொரு பொருளன்று; உருவன்று; அஃதோர் பேரின்ப நிலை.

வாழ்வாங்கு வாழ மேற்கொள்ள வேண்டியது 'அறம்'

வாழ்வாங்கு வாழும் இல்லற வாழ்க்கையாக அறத்தை அடையலாம்.

கடவுள் என்பதை எளிய பிழைப்புக்கு தாக்கியது கொடுமை; அச்சத்திற்கு தாக்கியது மடமை; ஏமாற்றலுக்கு தாக்கியது அடிமை; எதிர்பார்ப்புக்கு தாக்கியதோ போலித்தனம்.

உரிய வழியில் பொருளீட்டற்கும் துய்த்தற்கும் உரிமை உண்டு. பொருள்கள் உருவாக்கங்களே உயர்வு.