உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைவீச்சில் சாயும் உடலங்களை மீளச்

செய்வது

-

உயிர்வாழப் பொருள் தேவை அதற்காகத் தாயையும் தன்பெண்டு பிள்ளைகளையும் விற்றா பொருள் தேடுவான் ஒருவன்? தாயையும் தன் பெண்டு பிள்ளைகளையும் இணைத்த உழைப்பால் மானத்தோடு உயிர் வாழலாம்; பொருள் தேடலாம். இதையே நம் மறை ஒப்பும். அதைப் போலத் தமிழை, திருக்குறளை முகநக நட்புப் போல் நம்பிக்கையின்றி மேடையில் பேசியும் எழுதியும் விற்றா உயிர் பிழைக்க வேண்டும்? பொருள் திரட்ட வேண்டும்? பொருள் படைத்தவனே தமிழை திருக்குறளை ஆயிரம் ஆயிரமாய் விற்கிறான். விற்கிற விரைவில் கலப்பும் அழிப்பும் பேறு செய்கிறான் இத்தகையோரை எப்புலமை கொண்டவர் எனினும் அவரை இனம் கண்டு ஒதுக்கிவிட நாம் பழக வேண்டும். அவர்கள் ஏன் இந்நிலையை அடைந்தார்கள்? ஆம் அவர்களின் நெஞ்சத்தில் தமிழால் வாழ முடியும், திருக்குறளால் வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அவர் களின் நம்பிக்கை மாற்றுக் கருத்துகளிலும் வேற்றுமொழி களிலும் மண்டியிட்டுக் கெஞ்சி மண்ணில் சாய்கின்றன. இந்தச் சாயும் உடலங்களை நாம் எவ்வாறு மீட்பது? அவர்களும் தமிழர்களாம்!

குறளியம் 1-9-89