உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்கு வாக்கு?

நம்மை இன்று அலைக்கழிப்பது பிறப்பால் அதிகாரம் என்பதே. அரச மரபுரிமைபோல் தலைவர்களின் கான்முளை யுரிமை குடியரசு நாட்டிலும் கோலெடுத்தாளுகிறது. அதனை நிலை நாட்டுவதற்காக எல்லா வழிகளையும் செயற்படுத்து கிறார்கள். இக்குறை ஆளும் கட்சியிலும் உள்ளது. எதிர்க் கட்சியிலும்தான் உள்ளது. இத்கையோர் மக்களில்சிலரைத் தம் இழிசெயல்களில் வீழச் செய்து எப்படியும் வாழலாம் என்பதை நிலைப்படுத்திப் பிறப்பால் தலைமை என்பதை வகுக்க நினைக்கிறார். இதனால், பிறப்பால் கட்சி என்ற ஒன்றும் முளைத்து விடும் போல உள்ளது. இவற்றை வீழ்த்தியாக வேண்டும். வீழ்த்தவல்லது யாது? அஃது அன்றும் இன்றும் ஒன்றேதான். அதுதான் மக்கள் தம் உரிமைக்குரல்; ஒத்த சிந்தனை; உரத்த முழக்கம். இவற்றைத்தான் தெய்வப் புலவர் 'கெடுக உலகியற்றியான்' என்றும், தேய்க்கும் மடை என்றும் கூறுகிறார். இந்த அரிய கருத்துகளை நாம் அடிப்படைச் சிந்தனைகளாகப் பெற்றுள்ளோம். இவற்றால் உணர்த்தப் பெற்றுள்ள நாம் நல்லரசை வகுக்க வேண்டிய காலக்கட்டத்தில் இன்றுள்ளோம்.

குறளியம் 1-11-89