உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நம் மறை

திருக்குறளுக்குத் தனி நிறமுண்டு; குணமுண்டு; மணமுண்டு.

திருக்குறளே நம் மறை என ஏற்று, நம்பி, நம்மிடம் தொற்றியுள் பிற வழிகளை அறுத்துத் திருக்குறளே வாழ்வியல் என்ற உட்பாடு, வெளிப்பாடுகளே சொல்லும் செயலும் ஒன்றென உணர்த்த வல்லவை ஆகும்.

அதை விடுத்துத் தாம் கொண்ட பிற வரிகட்குத் திருக் குறளைத் துணையாகக் கொள்வோரை என்னென்பது?

உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் பிறமொழிக் கலப்பில் தான் வளரும் எனக் கூறும் அறிவிலிகள் கூற்றுப் போன்றதுதான் திருக்குறளை உயர்தனிச் செந்நெறி முழு முதல் நூல் என்று அறியாது கூறுவார் நிலையும்.

திருக்குறள் - குறளாயம் எதன் சார்பிலும் பிறப்பதன்று. உயர் தனிச் செந்நெறியுடையது. அதனால்தான் பொதுமறை, உலகமறை, வான்மறை, தெய்வமறை, ஐந்தாம்மறை, தமிழ்மறை என்ற பொய்யுரைகளை மறுத்துக் குறளாயம் - "திருக்குறள் நம் மறை' என அறிவிக்கிறது. நாம் அறிவோம் நாளை நமதே என்று.

-

வேலா