உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு நனவாக!

வேலாவும் அவர் தம் நண்பர் நால்வரும் அமெரிக்க நாட்டிற்குத் தனி வான்ஊர்தியில் பயணமாகிறார்கள். அகத்திலும், முகத்திலும் ஏதோ ஒரு விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களின் உறுதி தளர்ந்தோ, குலைந்தோ போய்விடக் கூடாது என்பதால்.

எப்புதுமையையும் விரைந்து வரவேற்பதும், வரவேற்பதைத் துணிந்து மேற்கோளாக்கிக் கொள்வதும், மெய்யெனப்பட்டதை எங்கும் எந்நிலையிலும் பரப்புவதுமாகிய உரிமைச் சிந்தனை மிகுந்தது அமெரிக்க மண். அம்மண்ணிற்குச் சென்று, “திருக்குறள் ஒன்றே ஈடு இணையற்ற தன்மான வாழ்வியல் நூல் என்றும், இதற்கு இணையான தோர் நூல் இதுவரை உலகில் தோன்ற வில்லை என்றும் முழக்கமிட வேண்டும். இதுவே எங்கள் நோக்கம்."

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். ஆங்காங்கு மக்கள் கூடிக்கூடி நாளிதழ்களில் வந்த சிகப்புக் கட்டமிட்ட செய்தி களைப் படித்துக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்க மக்களே! சிந்தியுங்கள்!!

  • நீங்கள் இதுகாறும் நம்பி வாழ்ந்த மதங்களும், அம்மத நூல்களும் உங்களை மனிதனாக வாழ வைத்ததா? இல்லை.
  • நீங்கள் நம்பித் தொழுத கடவுள்கள், தெய்வங்கள் உங்களை அச்சப்படுத்தி, மதவெறியர்களின் அடிமைகளாகத் தானே வைத்துள்ளது, மறுக்க முடியுமா?

அறிவுக்கும், மதத்திற்கும் தொடர்பில்லை என்பது தானே இன்றைய நிலை.

மாந்தன் மாந்தனாக வாழும் வழி, அறம் என்பது என்ன? பொருள் என்பது என்ன? இன்பம் என்பது என்ன? இறைமையின் உண்மை நிலை ஆகிய வைகளை எல்லாம் தெரிந்து கொள்ள