உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

11

ஆவலுடையவர்கள் எங்களைச் சந்தித்து நாங்கள் கொணர்ந்த பெட்டகத்திலுள்ள அறிவுச்செல்வத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

வ்வாறு செய்தி வந்த நாளே ஆயிரக்கணக்கான மக்கள் எங்களைச் சூழ்ந்தனர். தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் அனைத்திலும் இதே செய்திகள். திருக்குறள் தந்த அறிவுச் செய்திகளால் அறியாமை நீங்கித் தெளிவுற்றனர். "திருக்குறள் நம் மறை" என முழங்கிப் பின்பற்றி மகிழ்ந்தனர். உலகெலாம் இச்செய்தி பரவுகிறது.

திருக்குறள் குமுகாயம் தோன்றுகிறது; திருக்குறள் பேராட்சி மலர்கிறது. உலக மக்கள் ஒன்றாகின்றனர். மாந்தன் மாந்தனாகிறான். தமிழ்மண் உலக மக்கட் கெல்லாம் புனித மண் ஆகிறது. தமிழ் மொழியும், தமிழ் இனமும் உலக மக்களால் போற்றப்படுகிறது.

.....

நாங்கள் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறோம் இல்லை இல்லை... நான் மட்டும் சிரிப்பதாகப் படுகிறது. எதிர் நின்று என் ஆருயிர் வாழ்க்கைத் துணைநலம் சிரிக்கிறது; கனவு கலைகிறது.

வேலா