உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

கலைந்து செல்ல, மீண்டும் கூட, தனால் என்ன நன்மை?' என்றார் ஐயா குப்பு முத்து.

எனக்குப் பெரியவர் சொல். 'ஆழ்ந்த ஓர் உள்ளெண்ணம்' கொண்டு அவர் உரைப்பதாகப் பட்டதே ஒழியச், சிறிதும் வேறாகத் தெரியவில்லை. அமைதியாக, "இதனைப் பயனாக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என நினைக் கிறீர்கள்? அதனைத் தெளிவுபடுத்தினால் அவ்வழி உதவும் என்றால் நாம் நடைமுறைப்படுத்தலாமே!" என்றேன்.

"நானும் சில கூட்டங்களில் சொல்லிவிட்டேன்; பழையபடி பழையபடி இதுதான்; மாற்றமில்லை" என்றார்.

"நான் புதியவன் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்றேன். அரங்கில் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு நம் கருத்துகளைத் தெருவுக்குக் கொண்டு செல்லவேண்டும். அங் குள்ளவர்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதற்குத் தக்கபடி எடுத்துச் சொல்ல வேண்டும். பாட்டு கதை நாடகம் இப்படிப்பட்ட முறைகளை மேற்கொண்டால் தான், படியாத மக்களுக்கும் நம் கருத்துப் பரவும்; பயன் செய்யும்" என்றார்.

"உங்கள் திட்டம் வரவேற்கத்தக்க திட்டம்தான்! நாம் நம் கருத்தைப் பரப்புவதற்குரிய எளிய இனிய வழியைத் தானே சொல்கிறீர்கள்; இதில் என்ன தடை?" என்றேன். "என்னவோ தெரியவில்லை. நானும் சொல்லிப் பார்க்கிறேன். இந்தக் கூட்டம் மட்டும் இல்லை. எல்லாக் கூட்டங்களும் படித்தறிந்த சிலர் பேசிக் கலையும் கூட்டமாக இருக்கிறதே அல்லாமல், ஏழை எளியவர்களின் பக்கமோ, குடிசை குப்பப் பக்கமோ போக வில்லை" என்றார்.

"நாம், மாதம் தோறும் நடத்தும் நிலவுக் கூட்டத்தை ஊரூர்க்கும் தெருவுக்கும் கொண்டு செல்லலாமே என்றேன்". அமைதியானார் பெரியவர்.

கூட்டத்தில் அன்று அவர் வாழ்த்துரை வழங்கினார்; யான் என் பொழிவில் பெரியவர் நெஞ்சப்பதிவைச் சுட்டிக் காட்டி அவர்தம் நேரிய ஆர்வத்தையும் உரைத்தேன். வேலா சிந்தித்தார்."அப்படியே செயற்படுத்தலாம்" என்றார். அதன் விளைவே குறளாயம். அதுவரை ஈரோட்டிலேயே நடத்திக் கொண்டிருந்த முழுநிலவுக் கூட்டத்தை ஊர் ஊராகக் கொண்டு