உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

221

செல்லும் நடைமுறையை மேற்கொண்டதாகும். பெரியவர் குப்பு முத்து அவர்கள், அறக்கட்டளை அமைப்புக்கு எந்தக் குறளாய நிறுவனர் வழிகாட்டியாக இருந்தாரோ, அவர்க்கே வழிகாட்டி யாகிவிட்ட செய்தி இதுவாம்.

வாழ்வில் எவரொருவர் புரிந்துகொண்டு செயலாற்றும் திறமுடையவரோ அவர் எவரெவர்க்கும் வழிகாட்டியாகத் திகழ்வார் என்பது வெளிப்படையாம்.

பெரியவர் குப்பு முத்து அவர்கள் வாய்ச்சொல் வீரர் அல்லர். செயற்பாட்டுச் செம்மல்; சொல்வது எவருக்கும் முடியும். ஆனால் செயல் புரிதலே தேவை என்னும் உறுதியாளர். "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்”

என்னும் குறள்.

அதற்குப் பின்னர் ஈரோட்டுக் கூட்டங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் முத்து அவர்களைக் கண்டு கலந்துரை யாடும் மகிழ்வு வாய்ப்பதாயிற்று. வள்ளுவப் பொழிவா, வள்ளலார் பொழிவா நினைவுக் கூட்டங்களா மங்கலக் கூட்டங்களா முத்து அவர்கள் பெரும்பாலும் முன்னிலையராகவோ, வாழ்த்துநர் ஆகவோ, தலைவராகவோ இருப்பார். அவர் பொழிவு எளிமையும் இயல்பும் நடைப்பாடும் கொண்டதாக இருக்கும்! நீளப் பேசார். சுருங்கிய பேச்சும் செயற்பாடு பற்றியே அமையும். பிறர் நெடும் பொழுது பேசுவதையும் கூட்டம் கால அளவுக்கு மேல் நீளுதலையும் அவர் விரும்பார்.

குறளாயப் பொதுச்செயலாளர் தங்கவேலனார், சித்தோட்டுப் பாவலர் குமரநடவரச ஈவப்பனார், நகைச்சுவையரசு புலவர் ஆறுமுகனார் ஆகியோருடன் பெரிதும் கலந்து பேசும் வாய்ப்பு எனக்குக் குறளாயத்தில் உண்டு. அவ்வேளைகளில் குப்பு முத்து ஐயா அவர்களின் சால்பும் கொடையும் சிறப்பப் பேசப்படும்.

தாமே அறக்கட்டளை வைத்து அதன் வட்டி வரவுக்கு மேலாகவும் கொடை புரியும் பெருந்தகைமையர் அவர் என்பதை வியந்து கூறக்கேட்டு யான் மகிழ்ந்ததுண்டு.

முதியர் இல்ல உதவி, உடல் ஊனர் அமைப்பு உதவி, இசை நாட்டியப் பள்ளி உதவி, உயர்நிலைப் பள்ளியாக்கும் முயற்சி