உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

என்பவற்றையெல்லாம் ஆறுமுகனார் அவ்வப்போது எடுத்துக் கூறுவார். வலக்கை செய்வதை இடக்கையும் அறியாமல் செய்வது என்பதற்கு எடுத்துக்காட்டு குப்பு முத்து. அவரிடம் கேட்டால் கொடுத்ததைப் பற்றிச் சொல்லவும் மாட்டார்! அது அவர்தம் பெருந்தன்மை என்பார். அதனைக் கேட்கும் போதெல்லாம் “பழங்கொடைஞர் வழிமுறை அற்றுப் போகாமல் நம் கண்காணத் திகழ்கின்றவரை நாம் போற்றிப் பாராட்டுதல் தலையாய கடமை அல்லவோ! அவர்தம் வரலாற்றை வரைதல் இளைஞர்க்கு எடுத்துக் காட்டாக விளங்குவது அல்லவோ என்ன எண்ணம் எனக்குள் எழும்பியதுண்டு.

அதற்கொரு வாய்ப்புப் போலப் பெரியவர்க்கு வயது எண்பது நடப்பது அண்மையில் அறிய நேர்ந்தது. வெள்ளி விழா (25) பொன் விழா (50 மணி விழா (60) பவழ விழா (75) என்னும் நிலைகளைத் தாண்டி வயிர விழாக்காணும் (80) பெருமகனார்க்கு அவர் தம் விழாவைச் சிறப்பாக எடுப்பதுடன், அவர்தம் வரலாற்றை வெளியிடுதலும் நலமாம் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது. ஈவப்பரும் தங்கவேலரும் 'தக்க எண்ணமே' என்றனர்.

பெரியவர் விழா எடுத்தலையும் வரலாறு எழுதி வெளியிடு தலையும் விரும்பவில்லை.

'நம் புகழை நாமே கூறக்கூடாது. அது தற்பெருமையாகும்" என்னும் பேரெண்ணம் சங்கத்தார் காலம் முதல் தமிழகத்தில் இருந்ததால் நாம் இழந்த வரலாற்றுச் செல்வங்களும் பண்பாட்டு நாகரிகக் குறிப்புகளும் எண்ணற்றவை அன்றியும் நமக்கு நம்மவரே எடுத்துக் காட்டாக இருந்த பெருமைகளை அறியாமல் அயல வர்களையே சான்றாக்கித் தமிழ் மண்ணைத் தாழ்த்தவும் இடந்தந்து விட்டோம். நம் வாழ்வு, நம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக வேண்டுமானால் நம் வரலாற்றை எழுதாமல் வெளியிடாமல் முடியுமா?" என்று யான் வற்புறுத்தியதன்பின் ஏற்றுக்கொண்டார் பெரியவர்.

பின்னர் எளிமையாக விழா எடுப்பது என்றும், சிறிய அளவில் வரலாற்று நூல் வெளியிடுவது என்றும் முடிவு செய்தோம். அதற்கேற்பச் சிலச்சில குறிப்புகளைக் கேட்டுக் கேட்டுப் பெறவும், பிறர் பிறர் கூற அறியவும் வாய்த்தவற்றைத் தொகுத்துக் குறுகியதொரு சுவடியாக்கும் முயற்சியை யானே விரும்பி ஏற்றுக்கொண்டேன்.