உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

223

பல்லபல குறள்கள் நடைமுறைப்பட வாழும் பெருமகனார் குப்பு முத்து அவர்களின் இனிய வரலாற்றை வரைய ஒரே ஒரு குறள் பெரிதும் தூண்டியது. அக்குறள்.

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு"

என்பதாம்.

எண்பது நிறைவு காணும் இளம் பெரு முதியவர் குணப் பெருந்தோன்றல் குப்பு முத்து அவர்கள் வள்ளுவப் பெருந்தகை வாழ்த்தியது போல் "நிலமிசை நீடுவாழ்வா" ராக. எப்பாலும் இன்பமே சூழ்வதாக!