உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

227

ஆண்டுகளுக்கு மேலாக உணர்ந்து கொண்டாடும் வகையில் ஒரு பாட்டாகப் பாடி வைத்தார். அப்பாட்டு புறநானூற்றில் (150) உள்ளது. அதனைப் பாடிய புலவர் பெயர் வன்பரணர் என்பது. அவர் நிகழ்ந்த நிகழ்ச்சியை நிகழ்ந்தவாறு கூறி, நிறைவில்

"எந்நாடோஎன நாடும் சொல்லான் யாரீரோ எனப்பேருஞ் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே நளிமலை நாடன் நள்ளியவன் எனவே”

எனப்பாடி முடித்தார்.

வள்ளல் முத்து

புறநானூற்றில் காணும் இக்காட்சி இன்றும் காண முடியாத தாய் இல்லை! கண்ணாரக் காணலாம்! காதாரக் கேட்கலாம்! ஒருவர்க்கு என்ன, ஒன்பதின்மர்க்கு என்ன, பல ஒன்பதின்மர்க்கு,

உதவி செய்தேன்' என்பதைக் காட்டிக் கொள்ளாமல், அறவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் எண்ப தாண்டு நிறைந்த பெரியவர் "ஈரோட்டுப் பெருநகரில் வாழ்கிறார்! அவர் பெயர்'குப்பு முத்து" என்பது.

முதன்மை மாந்தர்

1984இல் ஈரோட்டு அரிமா சங்கத்தார் நகரின் முதன்மை மாந்தர் என ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தனர். அத்தீர்மானத்தின் சின்னமாகத் தோற்றம் வழங்கியவர் ஐயா குப்பு முத்து அவர்கள். அரிமா சங்கம் ஒரு பெருவிழா எடுத்தது. மாவட்ட ஆட்சியரை அழைத்தது அவரைக் கொண்டு பொன்னாடை போர்த்தி 'நகர முதன்மை மாந்தர்' என்னும் விருது வழங்கிப் பாராட்டியது. அவர்க்கு முன் அவ்விருது பெற்றார் எவரும் இலர்'. பின்னும் அவ்விருது பெற்றார் எவரும் இலர்'. முத்து பெற்ற முதன்மைச் சிறப்பு அது.

முத்துவுக்கு இம்முதன்மை எதனால் வாய்த்தது? அவர்தம் தொண்டே இப்பேற்றைக் கொண்டு வந்து சேர்த்ததாம். பெற்றோர்

ஐயா, குப்பு முத்து ஈரோட்டில் வணிகத் தோன்றலாய் வளவாழ்வுடன் விளங்குகிறார். அவர் பிறந்தது ஈரோட்டுத் திண்டலை அடுத்துள்ள செங்கோடன் பாளையம் ஆகும்.