உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

பாங்குக்காரர்

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

முத்துவின் தந்தையார் நல்லண்ணர், ஊரில் கொடுக்கல் வாங்கல் நடத்தும் செல்வராக இருந்தார் நிலபுலமுடைய வேளாண் தொழிலராகவும் இருந்தார். முறையாக வருமானவரி செலுத்தும் செல்வத் தோன்றலாகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஏர் பத்து ஏர் நடாத்தும் வேளாளர்க்கும் அத்தகு வருவாய் அமைதலோ, வருமான வரி செலுத்தும் நிலை அமைதலோ இல்லை. நல்லண்ணரின் கொடுக்கல் வாங்கல் வழியாக ஏற்பட்ட துணை வருவாய்ப் பெருக்கத்தின் விளைவே அதுவாகும்.

நல்லண்ணர் அந்நாளில் நிகழ்ந்த திண்ணைப் பள்ளியில் ஐந்து வரை கற்றவரே. உரைநடையில் அமைந்த பாரத இராமாயணக் கதைகளைக் கற்றதுடன் பிறர் கேட்கச் சொல்பவராகவும் விளங்கினார். அதுவே அவ்வூரில் பெரிய படிப்புத்தான். ஆயினும் 'படித்தவர் வீடு' என்று சொல்வதிலும் 'பாங்குக்காரர் வீடு' என்று செல்வச் சிறப்பு விளங்கவே திகழ்ந்தார். அவர்க்கு வாய்த்த ஒரே மைந்தர் முத்து ஆதலால், அவர் வளர்ப்புப் பற்றியோ, சீராட்டு - பாராட்டுப் பற்றியோ சொல்ல வேண்டியது இல்லை.

ளமை

"வாராது வந்த மாமணி" போன்ற நிலையில் பெற்றோர் களால் வளர்க்கப்பட்டார் முத்து. எண்பதாண்டு இளைஞராகத் திகழும் ஐயா குப்பு முத்துவின், இற்றைத் தோற்றத்தைக் காணு வார்க்கு அவர் தம் இளமை எழில் எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியது இல்லை! இளமையின் அழகு தனிச் சிறப்பினது. எல்லாப் பிறப்புகளுக்கும் பொதுவானதும்கூட. ஒரு குடிக்கு ஒரு மகனாகப் பிறந்து உயர் சிறப்புடன் வளர்ந்து வந்த அவர் கல்விப் பருவத்தை எட்டினார்.

கல்வி

அந்நாளில், இந்நாள்போல் 3 வயதுக்குள்ளாகவே முதுகு தாங்காத புத்தகச் சுமை சுமக்கும் குழந்தைகளின் ஆங்கிலப் பள்ளிகள் இருந்தது இல்லையே! வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்திலும் இல்லாத ஆங்கில மோகம் அல்லவா இந்நாள் கல்வி வணிகர்க்கு ஏற்பட்டுவிட்டது. குழந்தைகளின் பூங்காவாக மழலையர் பள்ளி விளங்கவேண்டும் என மாண்டிசோரி