உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

231

அம்மையார் விரும்பிப் பள்ளிகளை உருவாக்கினார். ஆனால், அது இப்படிக்கொள்ளைக் கூடமாகவும் மூட்டை தூக்ககமாகவும் குழந்தைகளுக்கு இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை.

கல்விக்கு முற்றுப்புள்ளி

முத்து நம் முன்னோர் வழக்கப்படி அரிச்சுவடி கற்பதற்குத் திண்ணைப் பள்ளிக்குச் சென்றார். உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகிய குறுங்கணக்கும், உயிர் மெய் 216 ஆகிய நெடுங்கணக்கும் கற்றார். வீட்டுக்கணக்கு கடைக்கணக்கு எழுதும் அளவில் கணக்கறிவு பெற்றார். ஐந்தாண்டுக் கல்வி அளவொடும் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

மேலே படிப்பதற்கு வேண்டும் செல்வ வாய்ப்பு இருந்தது. பெற்றோர்க்கு அறிவு வளமும் இருந்தது.

ஆனால் முத்துவை அவர்கள் மேலே பள்ளிக்குச் செல்ல விடவில்லை!

முத்துவும் செல்ல விரும்பவில்லை! இளமைத் துடுக்கோ கல்வியில் கருத்து இல்லாமையோ ஆசிரியர் கண்டிப்பு தண்டிப்பு களோ மேலே கற்பதற்குத் தடையாகிவிடவில்லை. பிறகு ஏன் முத்து மேலே படிக்கவில்லை?

ஐந்து படிக்கும்போதே 12, 13 வயது ஆகிவிடுவது அந்நாள் நிலை. அதற்கு மேலே வயது செல்வதும்கூட உண்டு. ஆதலால், ஓரளவு சிந்தித்துப் பார்க்கும் நிலை ஏற்படுவது இயற்கை.

<<

என்ன காரணத்தால் கல்வியைத் தொடராது நிறுத்தி னீர்கள்?" என நேரில் வினாவினேன். அவர் சொன்னார் என்ன படித்தாலும் குடும்பத் தொழிலாய உழவையும் கொடுக்கல் வாங்கலையும் தான் பார்க்கப் போகிறேன். அதற்கு வேண்டிய கல்வியைக் கற்றால் போதுமே;' என நிறுத்தினார்.

"என்ன இருந்தாலும் மேலேயும் கற்று விரும்பும் தொழிலைச் செய்வது கூட நலந்தானே" என வினாவினேன். அவர் தொடர்ந் தார்; "படித்தவர்களைப் பார்க்கிறோம்? படியாதவர்களையும் பார்க்கிறோம். அவர்களிடம் படிப்பை அன்றி வேறு எந்தப் பண்பாட்டிலும் நடத்தையிலும் வேறுபாடு தோன்றவில்லை. படியாதவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் படித்தவரும் இருக்கிறார். அந்தப் படிப்பைத் தொடராமையால் ஒரு குறை