உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நேர்ந்து விடவில்லை" என்றார் பெரியவர்.

"நீங்களாவது படித்துப் படித்தவர் இப்படி இருக்கிறார்" என்பதற்கு எடுத்துக் காட்டாக இருந்திருக்கலாமே?" என்று கேட்க நினைத்தேன். ஆனால், படித்தவர்களுக்கெல்லாம் படிப்பினையாக விளங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் அதனைக் கேட்க வேண்டியதில்லை" என்று நிறுத்திக்கொண்டேன்.

தம் பெற்றோர் தம்மை மேலே படிக்க விடாததற்கு ஓர் உள்ளெண்ணம் இருந்தது என்றார். அது தம் ஒரே மகன் படித்து வெளியூர் வேலையைத் தேடிப்போய் விடக்கூடாது என்பது என்றார். மேலே படியாமைக்கு அதுவே பெரிய காரணமாயிற்று என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே பிள்ளை எனப் பெற்றோர் கொடுக்கும் செல்வம், செல்வக் கேட்டுக்கும் கல்விக் கேட்டுக்கும் பண்பாட்டுக் கேட்டுக்கும் இடமாக இருத்தலை அறியும் நாம், பண்பின் கொள்கலமாகவும் குணக்குன்றாகவும் திகழும் குப்புவைப் பார்த்துப் பூரிக்கிறோம்.

திண்ணைப் பள்ளிக் கல்வியோடு நிறுத்திக்கொண்ட முத்து,தொழிலில் முழு அக்கறையோடு விளங்கினார். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; தாய் சொல் துறந்தொரு வாசகம் இல்லை" என்பதற்கு ஏற்ப நல்ல பிள்ளையாக வளர்ந்தார். தொழிலும் தொண்டும்

அக்கால முதியவர்களின் விடுதலைப் போராட்டம் எழுச்சி மிக்க இறைஞர்களையெல்லாம் வயப்படுத்தி ஆட்கொண்டது. அது முத்துவையும் ஆட்கொண்டது. அதற்கு வாய்ப்பாக ஈரோட்டுப் பெருநகரம் இருந்தது.

ஈரோட்டுப் பெரியவர் ஈ.வே.ராவுக்கு இணையாகப் பேராயத் தொண்டு (காங்கரசுத் தொண்டு) செய்தார் தமிழகத்தில் எவரும் இலர்" என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.க. வினால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய வைக்கம் வீரர் வளர்ந்து வந்த நகர் அல்லவா ஈரோடு; எத்தனை போராட்டங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை ஊர்வலங்கள்! கூட்டங்கள்! இவை, காளைப் பருவ முத்தைக் கவர்வதில் வியப்பென்ன; தம் ஊரிலும் நகரிலும் நிகழும் நிகழ்ச்சிகளில் ஆர்வலராய்த் தொண்டராய்த் திகழ வளர்ந்தார் முத்து!