உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

233

அவ்வளர்ச்சி, தொழிலைக் கெடுக்கவில்லை; தொண்டு வளர்ச்சியாகவே இருந்தது. அத்தொண்டின் முத்திரை நெஞ்சில் நிலை பெற்றே நின்றது. நெஞ்சில் நிறைந்த ஒன்று, நிகழ்ச்சியில் தானே வெளிப்பட வேண்டும்! அப்படி வெளிப்பட்ட பேறு பெருமைக்குரியதாம்!

திருமணம்

1942 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆண்டு ஆகும். அவ்வாண்டே "வெள்ளையனே வெளியேறு' என்னும் முழக்கம் கிளர்ந்தது. விடுதலை வீறு கொண்ட அவ் வாண்டில் முத்துவுக்கு அகவை 27. அறிவறிந்த தொழிலரா கவும் தொண்டராகவும், தாமே குடும்பம் நடத்தும் தகுதியுடைய வராகவும் விளங்கிய பருவம். அப்பருவத்திலேயே திருமணம் நிகழ்ந்தது. அத்திருமணம் கைந்நூலாடைத் திருமணம் - கதர்த் திருமணம் என்பது. அது விடுதலை வேட்கையர் அனைவரும் போற்றியும் பரப்பியும் வந்த முறைமையது ஆகும்.

-

இனித் திருமணத்தை நடத்தியவர் எவர்? 'அருமைக்காரர்' என்பார் நடத்தினார். அவர் சிறப்பைப் பற்றி, "பிறையாயிரம் கண்டு பிள்ளையார்க்குப் பூசை செய்து, அருமை மணம் செய்தோர்கள் அருமை எடுப்பார்கள்" என்கிறது நாட்டுப் பாட்டு (உதவியவர் திரு. ஈவப்பர்) அருமைக்காரரே, முழுத்தக் கால் நடல் முதலாகத் திருமணக் கடமை புரிவார். தாய்மொழியில் சமுதாயத் தலைவர்களால் செய்யப்பட்ட திருமணங்கள் எப்படி யெல்லாம் மாறிப் போயின என்பதை எண்ணிப் பார்த்தல் நம் பண்பாட்டுப் பயனாம்.

கைந் நூலாடைத் திருமணம் நாட்டில் நிகழ்ந்ததற்குப் பல நோக்கங்கள் உண்டு. வெளிநாட்டுத் துணிக்கு நீக்கமும், உள்நாட்டுத் துணிக்கு ஊக்கமும் தருதல் வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று முனைப்பான பேராயத் தொண்டரென நாட்டுக்கு உணர்த்துவது.

ன்னொன்று கூட்டத்தில் பேசி நாட்டத்தில் கொள்ளாதவர் போல் இல்லாமல் காந்தியத்தைச் சிக்கெனக் கடைப்பிடிப்பவர் இவர் என்னும் முத்திரை பதிப்பதற்கு என்பனவாம். மொத்தத்தில் விடுதலைத் தொண்டர்கள் விரும்பியே ஏற்றுக் கொண்டது இத்திருமணமாகும்.

இதனால் பட்டு உடுத்து மணக்கோலம் காட்டவல்ல செல்வரும், பருத்த கைந்நூல் ஆடை அணிவதற்கு முன் வந்தனர்.