உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

235

உணவைப் பற்றிச் சொல்லவில்லையே என்று எண்ணத் தோன்றும்.

திருமணம் தொடங்குவதற்கு முன்னரே உழுந்தக்களி முதலிய ஊட்ட உணவுகளைத் தந்து உண்ட நிறைவின் பின்னரே திருமணம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பசியோடு மங்கல விழாவில் கலந்து கொள்ளாமல் நிறை வோடு பரபரப்பு இல்லாமல் திருமணம் நிகழவும், வேலைக் கேடு இல்லாமல் நிகழவும் நம் முன்னோர் கண்ட முறை இதுவாம்.

திருமண முறை மாறியதுடன் காலமும் நிலையும் எல்லாம் எல்லாம் மாறிப் போயினவே!

முத்துவுக்குத் திருமணம் அருமைக்காரர் நிகழ்த்தி வைத்த அருமையை நினைத்தாவது பிறர் பற்றிக் கொள்ள வேண்டுமே! துணை நலம் :

ஈரோட்டை அடுத்துள்ள ஊர் குட்டிப் பாளையம். அதனைச் சார்ந்த சிற்றூர் கவுண்டர் புதூர் என்பது. அவ்வூரில் மணியக்காரராக விளங்கியவர் குமாரசாமிக் கவுண்டர் என்பார். அவருடைய சிறப்பைச் சொல்ல வேண்டியதில்லை. ஏன்?" நீ என்ன மணியம் வேலைக்கா போகப் போகிறாய்? என்று படிப்பாளிகளிடம் கேட்கப்பட்ட கேள்வியே, அவ்வேலைச் சிறப்பைப் புலப்படுத்தும். 'அவன் செய்யும் மணியத்துக்கு அளவே இல்லை." என்னும் தொடரே, அவ்வேலையின் அதி காரத்தை அறிவுறுத்தும்! இத்தகைய செல்வாக்கும் செல்வச் சிறப்பு மிக்க குடும்பத்திலேயே பாங்குக்கார நல்லண்ணர் பாங்காகப் பெண் பார்த்தார். பெண்ணின் பெயர் சாமியாத்தாள் என்பது. குப்புவுக்கு ஒப்பு இவர் என்று சொல்லத் தக்க தோற்றப் பொலிவும் பண்பு நலமும் ஒருங்கே அமைந்தவர். ஆதலால், இருதலை ஒரு புறாப் போல முத்துவும் சாமியும் உள்ளத்தால் ஒன்றி 'முத்து-சாமி' என்னும் பெயர்க்குரியவர் போல இல்லறம் நடத்தி வந்தனர்.

இல்லறம் :

நல்ல மாமன் மாமி : அழகும் அருமையும் அமைந்த கணவர்! சீராட்டுக்கும் பாராட்டுக்கும் உரிய பெற்றோர்! மாப்பிள்ளைக் கொடை, தெரிந்த கொடை, தெரியாக் கொடை