உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

என்பவை எதுவும் அறியாக் காலம். பெரியவர்கள் சொல்லை மதித்து நடத்தலும், கணவனை மதித்து மனைவியும், மனைவியைப் போற்றிக் கணவனும் வாழ்வதே இயல்பாகப் பழகிப் போன குடித்தனப் பாங்கு. இவற்றைக் கொண்ட இனியவர் இல்வாழ்வு எப்படி இருக்கும்? மழை பெய் என்றவுடன் பெய்யும் மழையைப் பெற்ற உழவன் மகிழ்ச்சிபோல மகிழ்விருக்கும் என்று வள்ளுவர் வகுத்த வாய்மை வாழ்வு முத்துவுக்கும் சாமிக்கும் அமைந்ததாம். வணிக நாட்டம்

செங்கோடன் பாளையத்தில் உள்ள நில புலங்களைக் கண்காணிப்பது, தந்தையார் நடத்திய கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு உதவுவது என முத்துவுக்கு ஆறு ஆண்டுகள் சென்றன. கூட்டுக் குடும்பம் ஆதலால் சிக்கல் எதுவும் இன்றிச் சீராக நடந்தது. ஆனால், முத்தின் எண்ணம் வணிகத்தில் ஈடுபட்டது. அன்றியும் எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்வி யையும் கருதியது. அதனால், 1948இல் ஈரோட்டில் குடியிருக்கத் தொடங்கினார் முத்து.

"நகரத்தை நாடியது; நலவாழ்வுக்காகவா? நாகரிக வாழ்வுக் காகவா? இல்லையே! ஏதாவது தொழில் செய்ய வேண்டும், வாணிகம் புரிய வேண்டும் என்பதுதானே நோக்கம். அதற்கு ஏற்ப முத்து தம் உறவினர் முத்துசாமிக் கவுண்டர் என்பாரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்கினார்.

முதற்கண் மிதிவண்டிக் கடை ஒன்று வைத்தனர். பின்னர் அரிசி ஆலை ஒன்று நடத்தினர். இவ்வாறு இருவரும் இணைந்த கூட்டுப் பங்குத் தொழில் ஏழு ஆண்டுகள் நிகழ்ந்தன.

வணிக விரிவு :

முத்துவின் எண்ணம் மேலும் விரிந்தது. பயறு வகைகள் பருப்பு வகைகளை ஆக்கிரா முதலிய வட நாட்டுப் பெருநகரங் களிலிருந்து வாங்கி விற்கும் முயற்சியை மேற்கொண்டார். பட்டறிவும் துணிவும் மிகமிகத் தொழிலும் வாணிகமும் புதுப் புது வழிகளால் விரியத்தானே செய்யும்! அவ்வகையில் பருத்தி விதை வாணிகம் மேற்கொண்டார். 1000 மூடை 2000 மூடை என மைசூரில் இருந்து பருத்தி விதையை இறக்குமதி செய்து விற்பனை புரிந்தார். இவ்வகையில் 1959 வரை உள் நாட்டளவில் ஏற்றுமதி இறக்குமதி வாணிகமாக நிகழ்ந்தது.