உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

237

முத்துவின் எண்ணம் ஈரோட்டுச் சூழல் துணி வணிகத் திற்கு மிகமிக ஏற்றதாக இருப்பதை உணர்ந்தது. அதனால் அவ்வாண்டிலே மற்றை வணிகங்களை விடுத்துச் சவளிக் கடை வைத்தார். அதற்குத் தம் ஓரகத்தார் (சகலர்) கூட்டைச் சேர்த்துக் கொண்டார்.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையார்த்தற்று"

என்பார் திருவள்ளுவர். ஒரு செயலைச் செய்யும் போதே அதன் சார்பான செயல்களையும் செய்து முடித்தல், பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல நலஞ்சேர்க்கும் என்பது இதன் பொருளாம். இதற்குத்தகச் சவளி வணிகத்தில் ஈடுபட்ட முத்து, விசைத்தறி போடும் திட்டத்தையும் மேற் கொண்டார். முதற்கண் 24 தறிகளை அமைத்துத் திறம்பட நடத்தினார். சவளிக்கடையும் தறி நெசவுமாகிய இரண்டும் சார்புத் தொழிலாகி, ஒன்றுக்கு ஒன்று உதவியும் ஊக்குவிப்பு மாகிச் சிறந்து வந்தன. பொருள் நிலை, முயற்சியால் மேலும் மேலும் சிறப்படைய, வாடகையாக இருந்த நிலையங்களைச் சொந்தமாகவே உருவாக்கிக் கொள்ளும் உயர்வும் உண்டாயிற்று. அது போலவே வாடகையில் குடியிருந்த வீட்டையும் விட்டுச் சொந்தமாகவே மனையிடம் வாங்கி வளமான மனை எழுப்பும் வாய்ப்பும் ஏற்பட்டது.

பெற்றோரைப் பேணல்

"முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்' எனச் சேர அரசன் ஒருவன் சிறப்பிக்கப் படுகிறான். அவனுக்குரிய சீர் சிறப்புகள் பலப்பல. எனினும், அவன் தன் பெற்றோரைப் பேணிய பெருஞ் சிறப்பே பிறசிறப்புகளிலும் மேலாகத் திகழ அதனை எடுத்துக் கூறி,"முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" எனப் புலவர்களால் பாடு புகழ்பெற்றான்.

அவனைப் போலவே முத்தும் தம் பெற்றோரைப் பேணுதலில் தனி விருப்புக் கொண்டிருந்தார். தம்மோடு வைத்துக் கொண்டு சிறப்பாகப் போற்றினார். அன்னை மாராயம்மாள் அகவை 70 வரை வாழ்ந்தார். அன்னையார் மறைவுக்குப் பின்னர்த் தந்தை யாரை ஈரோட்டில் தம்மோடு வைத்துக் கொண்டு பெருந்தக்க வகையில் பேணினார். அம்முதுமைப் பேணுதல் குடும்பச் சொத்துப் போல ஆகிவிட வேண்டும் அல்லவோ! ஆகிவிட்டால்