உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

வழி வழியாகக் குடிநலம் சிறக்கும் அல்லவோ! அப்பேற்றைக் குப்பு செய்த பேற்றால், இன்று அப்பேற்றைப் பெறும் பேறும் இயல்பாகப் பெரியவர் முத்துவுக்கு வாய்த்துள்ளது. அன்பு மக்களாலும் அருமை மருமக்களாலும் இனிய பேரச் செல்வங் களாலும் இனிதுறப் பேணிப் போற்றும் பேறு பெறுகின்றனர். தந்தையார் வழி :

தந்தை நல்லண்ணரிடமிருந்து முத்து செல்வம் செல்வாக்கு பண்பாடு இவற்றை மட்டும் பெற்றார் அல்லர். கொடைத்திறமும் குமுகாயத் தொண்டும் கூடவே இருந்து கண்ணாரக் கண்டு களித்த காட்சிகள் அல்லவோ அவை?

உழவடைக் களத்திற்கும் வீட்டிற்கும் புலவர்கள் வருதல் உண்டு. அவர்கள் களம்பாடுதல், மனைபாடுதல் எனப் பாடிப் பரிசில் வேண்டுவர். களத்துக் குவியலில் இருந்து, பாடி வந்த புலவர்க்கு அள்ளி வழங்குவதையும் வீட்டில் விருந்தோம்பிக் கொடை புரிந்து விடுவதையும் இளம்பருவம் முதலே உணர்ந் திருந்தார் முத்து.

.

பாங்குக் கடை நடத்துபவர், கைம்மாற்று எனப்பணம் தரார். ஏனெனில், நாள்வழி வட்டி போட்டுப் பார்த்த வழக்கம் வட்டியில்லாமல் தருவதை இழப்பாகவே எண்ணுதல் இயல்பு. ஆனால், நல்லண்ணர் திருமணம் என்று வைத்து விட்டு அதற்கு வேண்டும் பொருள் முடைப்பட்டு எவரேனும் தம்மிடம் வந்து கேட்டால், அவர்களுக்கு வேண்டும் தொகையைக் கைம் மாற்றாகத் தந்து பின்னே பெற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குடும்பங்கள் தழைத்து விளங்கப் பொருள் ஒரு தடையாக இருக்கக் கூடாது என அவர் கொண்ட நல்லெண்ணம் தம் தந்தையாரின் பெருமையாக முத்துவுக்கு விளங்கியது.

66

'அந்நாளில் ஒரு பவுன் 13 ரூபாய். 2 மூடை மஞ்சளை விற்றால் ஒரு பவுன் வாங்கலாம். அந்நாள் திருமணமும் ஆடம் பரமாக இராது. சிக்கனமாகவும் நடைபெறும். அதற்கும் முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது பெரிய உதவியாக அதனைப் பெற்றவர்களுக்கு இருந்தது. அதனால் குடும்பமே காலம் காலமாகப் பாராட்டும் பெருமை வாய்ந்தது. என் தந்தையாரின் நேர்மையும், சொல்லும் செயலும் ஒத்த நிலையும் கொடையுள்ளமும் பெருமைப்படத் தக்கனவாகவே இருந்தன." என்கிறார் முத்து.