உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

வாழ்க்கைத் துணைச்சீர்மை :

தந்தையும் தாயும் கொண்ட

239

ல்வாழ்க்கை தம்

வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக் காட்டாகவே இலங்கியது என்பதை எண்ணிப் பூரிக்கும் முத்து, தம் அருமைத் துணையின் பண்பு நலங்களையும் பாசத்தையும் எண்ணி உருகுகின்றார். அக அழகும் புற அழகும் அமைந்த அவ்வடிவு நெஞ்ச ஓவியமாகவும் நிழலோவியமாகவும் திகழ்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.

குடிநலம் பேணலில் அம்மையார் தனிச்சிறப்புக் கொண்டி ருந்தார். அக்குடி நலம் சுற்றமாகவும் சூழலாகவும் விரிந்து சென்றது. பழகிய குடும்பங்களுக்கு நல்லது பொல்லது நிகழும் பொழுதில் முன்னின்று எல்லா உதவிகளும் செய்தார். மணமகள் ஒருத்திக்கு அணிமணிகள் வேண்டும் என்றால், தம் பொருள் கொண்டு போய்ப் பூட்டி அழகுறுத்தும் தாய்மைப் பண்பில் திகழ்ந்தார். ஏற்றத் தாழ்வு ஏட்டிக்குப் போட்டி சண்டை சச்சரவு என்பவை அறியா அமைதிப் பிறவி அது என்பதைக் கேட்டு அறியும் நாம் நம்மை அறியாமலே தனிப்பெரும் மதிப்புக் காட்டும் வாழ்வாகின்றது.

அவர் வாழும் போதே தனித்தனி நற்செயல்கள் பொதுப் பணிகள் செய்த அளவில் இருந்து அறக்கட்டளை அமைக்கும் திட்டத்தையும் முத்து மேற்கொண்டுள்ளார். நம் செல்வம் இப்படி நமக்கு இல்லாமல் பிறர்க்குச் செலவிடப்படுகின்றதே என்னும் எண்ணம் அவர்க்கு எப்பொழுதும் இருந்ததில்லை. பிறர்க்கு உதவி செய்வதில் துணையாக இருந்ததுடன் அவருமே விரும்பிச் செய்தார் என்பதை அறியும்போது முத்து கொடுத்து வைத்தவர் என்று மகிழ்கிறோம். அதைப் போலவே அம்மை யார்க்கும் முத்து கணவராக வாய்த்ததால் அவரும் கொடுத்து வைத்தவர் என்று பாராட்டுதற்கு உரியவரே ஆகின்றார்.

“புகழ்புரிந்த இல்இல்லார்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை"

என்னும் குறள்மணியும்,

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி"

என்னும் குறள்மணியும் இருவர் வாழ்வாகவும் இ

நடையிடுதல் எண்ணி மகிழத் தக்கதாம்.

ணைந்து