உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மக்கட் பேறு

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

முத்து - சாமியம்மையார் இனிய வாழ்வில் மக்கள் ஐவர் தோன்றினர். ஆடவர் மூவர். மகளிர் இருவர்.

மூத்தமகன் வாசுதேவன் என்பார். அவர் இளம் அறிவியல் பட்டம் பெற்ற படிப்பாளியானார். பொழில் வாய்ச்சி (பொள்ளாச்சி)த் திருச்செல்வம் மகாலிங்கனார் நிறுவனம் சார்ந்த விதை ஆய்வுக்குழும்பில் பணி பெற்றுச் சிறந்து விளங்கி வந்தார். துள்ளுந்து (பைக்) ஒன்றின் பின்னே இருந்து சென்ற போது நேர்ந்த ஒரு கொடிய நேர்ச்சியால் இயற்கை எய்தி ஆறாத் துயராக்கி விட்டார். அவர் இயற்கை எய்தியது 23 ஆம் அகவை என்பதை எண்ண, எவரையும் உருக்கத்தக்க செய்தியாம்.

அடுத்துப் பிறந்த மகளார் சரோசினியார் அவர் துணைவர் பேராசிரியர் கறுப்பண்ணர்; பொறியியல் மேனிலைப் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக மக்கள் இருவர் உளர். ஆண் பிள்ளை பொறிஞராகவும் பெண் பிள்ளை மருத்து வராகவும் திகழ்கின்றனர்.

மூன்றாம் மகனார் குலசேகரன் என்பார் பொறிஞர். அவர் தம் துணைவியார் இராசேசுவரியார் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகனார் உள்ளார். குலசேகரனார் சொந்த வணிகத்திலேயே ஈடுபட்டுள்ளார்.

நான்காம் மகனார் கிருட்டிண மூர்த்தி என்பார் இவரும் தம் மூத்தாரைப் போலவே வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்தம் துணைவியார் சத்தியபாமா என்பார். இவர்களுக்குப் பெண்மக்கள் இருவர் உளர்.

கடைசி மகளார் சந்திரிகா என்பார். அவர்தம் துணைவர் எலும்பு மருத்துவர் மாணிக்கம் என்பார். இவர்களுக்கு ஆண் மக்கள் இருவர் உளர்.

மனைமாண்பு :

மக்களைப் பெறுதல்; மனையறங்காத்தல்; சிறந்த செயல் களைச் செய்தல்; அவற்றைத் தம் மக்களும் பயிலுமாறு செய்தல்; அதன் பின்னர்த்தம் வாழ்வைப் பொது நலப்பணிக்கு ஆக்கல் என்பவை நம்முன்னையோர் கண்ட வாழ்வியல் கொள்கை யாகும். இதனைத் தொல்காப்பியம்,