உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

253

இடம் ஊர்ப் பள்ளிக்கூடம்! மருத்துவ உதவியோ இலவயம்! ஆனால் மருந்துக்கு என்ன செய்வது?

எவ்வளவு தொகைக்கு வேண்டுமானலும் மருந்து வாங்கிக் கொண்டு பற்றுச்சீட்டை அனுப்பிவிட்டால் அறக்கட்டளையே அத்தொகையை வழங்கிவிடும். அத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளார் முத்து.

மக்கள் சக்தி இயக்கம்

அறிஞர் உதயமூர்த்தி அவர்கள் உருவாக்கி ஊர்தோறும் தொண்டாற்றச் செய்யும் இயக்கம் மக்கள் சக்தி இயக்கம் என்பதாம். அரசியல் சார்பு இல்லாமல் ஊர்நலம் கருதி ஊரவரே உணர்ந்து பொது நலப்பணி புரியுமாறு 'தூண்டும் இயக்கமே ஈதாம். இதன் தோற்றம், இளைஞர்களிடம் கூட்டுறவையும் தொண்டு உணர்வையும் உண்டாக்கி ஊக்கிவருதல் கண்கூடு அன்றியும் அரசும் மக்களும் செய்யத்தக்கன இவை, செய்யத் தகாதன இவை என்பதை நன்கு அறிவுறுத்தும் இயக்கமாகவும் திகழ்கின்றது. இவ்வமைப்பின் மாவட்ட அமைப்பாளராக இருந்து முத்து அவர்கள் தொண்டாற்றுகின்றார்.

இசைப்பள்ளி

ஈரோட்டிலே சம்பத்து இசை நாட்டியப்பள்ளி என ஒன்று சிறப்பாக இயங்குகிற்று. அதனைத் தேடிப்போய்ப் பார்த்தார் முத்து. நிறுவனர் வள்ளியப்பரொடு கலந்துரையாடினார். உரையாடலின் இடையே.... உங்களுக்கு உடனே தேவையானது ஏதாவது உண்டா?" என வினவினார். முத்து, 'வீணை' ஒன்று வாங்கித் தந்தால் நலமாக இருக்கும் என்றார் இசைப்பள்ளி உரிமையாளர். அப்படியானால் அதனை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்; தொகை தந்துவிடுகிறேன்." என்றார் முத்து. வியப்புக்கு ஆளானார் இசைப்பள்ளி உரிமையாளர். தாமே தேடிவந்து "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்று நல்குகிறார் அல்லவா! நாவுக்கரசரின் இத்தேவாரத்தைப் பண்ணோடு பாடிப் பரவயம் அடைபவர் அல்லவோ அவர் அவர்க்கு. அவ்விறைமை நலமே எதிரில் கண்ட காட்சியாக இருந்திருக்கும் அல்லவா? அவ்வளவில் நின்றுவிடவில்லை கொடை நலம். இசை நாட்டியப் பள்ளி கட்டடத்திற்காக முத்து பத்தாயிரம் தொகையும் நல்கினார்!