உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

259

என் மக்களே முன் வந்து உதவுகின்றனர். மருமகளும் தாமே முன் வந்து என் வழியாக உதவுகின்றனர். என் கொடையையோ, உதவியையோ எதற்கு என்றோ எவ்வளவு என்றோ கண்டு கொள்ளாமையுடன், குடும்பத்தவர்களும் அவ்வறச் செயலில் பங்கு கொண்டிருப்பதால் எனக்கு நிறைவாகின்றது. யான் ஏதாவது செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் என்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நினைக்கும்போது பூரிப்பும் ஏற்படுகின்றது" என்றார் பெரியவர்.

பூரிப்பு

தங்கள் மக்கள் மருமக்களைப் பற்றிய இப்பூரிப்புப் போல வேறு பூரிப்பும் உங்களுக்கு ஏற்படுவதுண்டா? என்று வினா வினேன்.

சின்னஞ்சிறு பிஞ்சுப் பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வணக்கம் சொல்லுவதைக் கேட்கும் போதெல்லாம் அப்படியே சில்லிட்டுப் போகிறேன். கல்விக்காகச் செய்யும் என் எளிய தொண்டுக்காக எவ்வளவு பெரிய பரிசுகள் இவை. இதனால் எல்லாப் பணிகளிலும் கல்விக்குச் செய்யும் பணியே உயர்பணி என நம்புகிறேன். இந்தப் பள்ளிக் கூடங்களை உயர்நிலைப் பள்ளியாக்குவதற்கு எவ்வளவு செலவிடலும் என்ன அலைவு அலைதலும் கடமை என உணர்கிறேன். அதே எண்ண மாகவும் வாழ்கிறேன்" என்கிறார்.

ஆயிரம் பிறைகண்ட அண்ணல் குப்பு முத்துவின் ஆர்வம் தந்நல ஆர்வமா? அரசே முன் வந்து செய்ய வேண்டும் கல்விப் பணிக்குத் தக்கவற்றைத்தாமே செய்ய முன் வருவார்க்கும், கால நீட்டிப்பு நேர்கின்ற தென்றால், இரங்கத் தக்க நிலையே அல்லவோ பொதுத்தொண்டரை ஊக்குதல் அல்லவோ அரசு முன் வந்து செய்யவேண்டிய கடமை! பெரியவர் எண்ணம் விரைவில் நிறைவேறுவதாக! பிஞ்சுக் குழந்தைகள் மேலும் மேலும் பூரிப்புத் தந்து உயிர் தளிர்க்கச் செய்வாராக!

வாழிய நலனே!

வாழிய நலனே!