உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

வாழ்வாக இனிதின் இயலும் தோன்றல் குப்பு முத்து பெருமையும் புகழும் அவரளவில் நின்று விடுவதோ?

பெரியவர்கள் முத்து அவர்கள் குணக் குன்றாக இருப்பதும் கொடைச் செல்வராக இருப்பதும் பாராட்டுக்கும் புகழுக்கும் உரியவையே. எனினும் அவர்தம் புகழுக்குப் பின்னிலையில் இருப்பவரை எண்ணிப் பாராதிருத்தல் கூடுமா?

பெற்றோர் இருவரும் பெரு மூதாளராக இருந்துவர். அவர்கள் காலத்திலேயே பெருந்தக்க செயல்களில் குப்பு இறங்கியுள்ளார். அவர்தம் உழைப்பால் தேடியதாக இருந்தாலும் பெற்றோர்தம் மன நினைவும் வேண்டியது இன்றியமையாதது தானே.

இனி முத்துவின் துணைவியார் இசைவும் ஒத்துவரா நிலைமை இருந்தால் குடும்ப அமைதி சிறவாதே!

முத்துவின் மக்களும் மருமக்களும் கருத்தொருமித்து உதவா நிலையில் இருந்தால் முத்து தாம் தேடியதே எனினும் அறத்தின் பாற்படுத்த இயலாதன்றோ!

இச்சூழலை எண்ணினால் தோன்றுவது என்ன?

பெருந்தகைக் குப்புவின் உள்ளம் போலவே சார்ந்ததன் வண்ணமாகும் சால்புத் தோன்றலாகப் பெற்றோரும் துணையும் மக்களும் அமைந்துள்ளனர் என்பது தெளிவாம்!

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது போலத் தலைவர் எப்படி குடும்பம் அப்படி என்னும் சிறப்பில் அமைந்த பேறெனப் பாராட்டத் தகும். இந்நிலை பிசிராந்தையார் கூறிய “மாண்ட என்மனைவியோடு மக்களும் நிரம்பினர்

66

யான்கண் டனையர் என் இளையரும்

என்னும் தொடர்களுக்கு இணைய அமைந்த குடிச் சீர்மை புலனாகும். யாண்டு பலவாக நலவாழ்வு வாழ்தலின் நயனும் புலனாகும்.

இப்புலப்பாட்டின் பயன் என்ன? அறக்கொடை வாழ்வு வழிவழியாகத் தொடர்ந்து குடிப் பெருமையாகத் திகழும் என்பதாம்.

நெருக்கடிக்காக என்னை நாடி வருகின்றனர். இருக்கும் தொகையைக் கொடுத்து விடுகிறேன், மேலும் தேவைப்படுகிறது.