உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

257

"இந்நூலை அச்சிட உதவிய அருந்தமிழ் வள்ளல்" என்னும் தலைப்பில் 3 வெண்பாக்களை இயற்றியுள்ளார். அருமை மிக்க அவ்வெண்பாக்கள்.

ஈரோட்டில் வாழும் இனிய தமிழன்பர்

பேரோங்கு வாணிகத்தைப் பேணுபவர்- சீராளர் எப்பணிக்கும் நன்குதவி எண்ணுவதே நம்முடைய குப்பமுத்து ஐயா குணம்.

குப்பமுத் தையா குணம்யார்க்கும் வாய்த்திடுமோ செப்பமுற்ற இந்தச் சிறுநூலை-ஒப்பரிய மாணிக்க மென்ன மனமுற்ற அன்னவர்க்கே காணிக்கை செய்தேன் கனிந்து.

செப்பமிகு பண்பாட்டை செந்தமிழின் மேம்பாட்டை

எப்பொழுதும் எண்ணுமுயர் ஏந்தலவர்-குப்புமுத்து

வள்ளலவர் தந்த வளமான நன்கொடையால்

தெள்ளுதமிழ் நூலிதுவாம் தேர்.

CC

வள்ளலின் வரலாறு என்னும் பகுதியில், உயர்திரு குப்புமுத்து ஐயா அவர்களின் உதவியும் உறுதுணையும் இல்லாமல் இன்று ஈரோட்டில் எந்த இயக்கமும் என்னலாம்." என்கிறார்.

ல்லை

குப்பு முத்து அவர்கள் சிறந்த அமைப்புகளிலெல்லாம் பங்கேற்கிறார்கள்! பொறுப்பேற்கிறார்கள்! வேண்டும் உதவி களைப் புரிகிறார்கள். பண்புக்குப் பாராட்டு வந்து சேர்தல் இயற்கைதானே! அவ்வகையில் தவத்திரு வேதாத்திரியார் வழங்கிய அருள்நிதிப் பட்டம் சிறப்பினதாம்! ஈரோட்டு முதன்மை மாந்தர் என அரிமாச் சங்கத்தோர் வழங்கியதோ தனிச் சிறப்பினதாம்.

உரையும் பாட்டும் என்னும் இருவகையாலும் பாடுபுகழ் பெறுதலைச் சங்ககால வேந்தர்களும் விரும்பி நின்றனர். புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தியும் பெறுவர் என்று அப்பெரும் புகழைப் பாராட்டினர். பட்டுக் கிழிந்து போகும்; பாட்டுக் கிழியாது என்றார் ஔவையார். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே" என்பது புறப்பாட்டு. வள்ளுவரோ இல்லற வாழ்வின் நிறைவாகப் 'புகழ்' என்பதை நிலைநாட்டினார். இசை