உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தாமும் பழுத்துத் தம்பழ வித்துகள்

தாமும் பழுக்கத் தக்கவை ஆய்விடும்!

வள்ளுவ வள்ளல் வகுத்த வாய்மொழி கொள்ளுத லின்றிக் கொடுத்தலும் இன்றித் தள்ளிய கேட்டால் தக்கதை விட்டு வழிவழிக் கேடும் வரவரக் கேடும்

ஒழியா தோங்கி உயர்ந்திட லாயதாம்! இவ்வியல் நீங்கிச் செவ்விய நல்லறம் ஒவ்விய செய்கை உண்மை உயர்ச்சி ஆயவை தம்மைக் கண்டதும் கண்டதும் தூயவாம் அவற்றைத் துலங்கத் துலங்கப் பரப்பிட முயல்வோம்! பாராட் டெடுப்போம்! குப்பு முத்துவாம் குணநலத் தோன்றல் செப்பருஞ் சிறப்பைச் செப்பிய நூலிது செப்பும் நோக்கம் இதுவே! அறிஞர்! ஒப்பிலா உலகம் ஒளியுடன் திகழ உரியதாம் வழியிதைப் புரிவோம்! மேலும் விரிக விரிக விரிவர லாறே!

வரலாற் றுலகம் வரலால் நந்தம்

உரமும் ஊற்றமும் உயர்வும் உலகம் அறிந்திட வாய்க்கும்; ஆயும் ஆர்வலர் மறந்திடா வகையிலும் மறுத்திடா வகையிலும் உறுதி செய்தே உலகுக் களிப்பர்.

சிறப்பும் சீர்த்தியும் செம்மையும் தனிமையும் திறப்பட இருந்ததால் தேர்ந்த கால்டுவெல் உயர்தனிச் செம்மொழி உயர்தமிழ் என்று மயர்வற உரைத்து மாண்புறச் செய்தார் சார்பிலாக் கருத்தொடு சால்பு மிக்கவர் யார் தமைக் கருதியும் நேர்தரு கருத்தை மாற்றி உரையார் மயக்கி உரையார்! ஏற்றம் மிக்கதாம் சிந்து வெளியின் நாக ரிகந்தான் நம்மவர் கொண்ட நாக ரிகமென நானிலம் கொள்ளவும், கொடுங்கடல் கொண்ட குமரிக் கண்டம்