உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

நெடுந்தமிழ் மாந்தர் நிலைபெறத் தோன்று

நிலமெனும் ஆய்வும் நீணில உலகின்

தலைமொழி தமிழே என்றும் இந்நாள் துறைதுறை வல்ல நிறைபெரும் அறிஞர் குறைவர ஆய்ந்து குறித்திடல் அறியின் மறந்தும் துறந்தும் போதல் இன்றிச் சிறந்தவை எல்லாம் சிதைவுறா வகையில் எழுத்தா வணமாய் இருந்திடச் செய்யப் பழுத்த புலமையர் அழுத்த மாக

உழைத்திடல் வேண்டும் உயர்பெரும் தோன்றல் விழுத்தகு கிழவர் விழாக் கோட் செல்வர் குப்பு முத்து கொடையால் எய்தும் ஒப்பறும் இந்நூல் உரைக்கும் தமிழ்வளம், துறைதொறும் துறைதொறும் தமிழ்நூல் நிறைதர எழுதி நிறைக்குவீர் எனவே.

முற்றிற்று.

263