உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலா :

44

66

1. அன்புப் பண்பு

வணக்கம்; வேலா பேசுகிறேன்.

'வணக்கம்.'

""

மறைமலை நகர்த் தொடர் வண்டி நிலையப் பெயர் மாற்றம் குறித்த தங்கள் அறிக்கை உரை ஆகியவற்றைப் படித்தேன். ஒரு தமிழ்ச் சான்றோர் பெயரை மாற்ற வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள நடவடிக்கையை விடுதல் நன்று. தமிழ், தமிழ் நாட்டினர் அனைவர்க்கும் பொதுச் சொத்து; தமிழ் அறிஞர்களும் அப்படிப் பொதுச் சொத்தானவரே; புகழ் வாய்ந்த தமிழ்ப் பெருமகனார் பெயரை மாற்ற வேண்டும் என்று பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம். பேராயக் கட்சி தமிழுக்கு எவ்வளவோ தொண்டு செய்த துண்டு. அவற்றை யெல்லாம் மறந்து பழிக்கு ஆளாக்கிவிட வேண்டாம்.

""

"பெருந்தலைவர் பெயரை மாற்றக் கூடாது என்கிறோம். மறைமலையடிகளை நாங்களும் மதிக்கிறோம். அவர் பெயர் நிலையத்திற்கு வைக்கப்படவில்லை. நகர்ப் பெயரை நாங்கள் மாற்றச் சொல்லவில்லையே."

"நகர்ப்பெயர்த் தொடர்பால்தானே நிலையப் பெயர் அமையும். அதுதானே வழக்கம். ஒருநாள் நடைபெற்ற மேடைப் பெயர் நிலைத்த பெயர் ஆகுமா? பெருந்தலைவர் பெயரால் மாவட்டம் உண்டு; பல்கலைக்கழகம் உண்டு; நகரங்கள் சாலைகள் நினைவகசங்கள் உண்டு! ஆனால், மறைமலையடிகள் பெயரால் அமைந்த நகரத்தோடுவிளங்கும் நிலையத்தை மாற்றி அமைக்கப் போராடத் துணிவதும், அந்நிலையத்தில் உள்ள தமிழ் எழுத்தைத் தார் கொண்டு அழித்ததும் மாறாப்பழியும் களங்கமும் ஆகும். பெருந்தலைவர் மேல் நாங்கள் கொண்டுள்ள மதிப்பைக் குறைப்பது போல் எளிய பொருளாக்கிவிட வேண்டாம்.