உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

CC

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

"அரசியலில் பெருந்தலைவர்; தமிழக முதல்வராக இருந்தவர்; அனைத்திந்தியத் தலைவராகத் திகழ்ந்தவர்; அவர்பெயரை மாற்றி விட்டதே தவறு; அரசியல் சூழ்ச்சிக்குத் தமிழாசிரியர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் இரையாகி இப்படிக் கூறுகிறீர்கள்.நாங்கள் எங்கள் போராட்டத்தை விடப்போவ தில்லை. அதுநேர்மையான உறுதி யான போராட்டம்."

"தோற்கப் போகிறீர்கள்; பழிக்கு ஆளாகப் போகிறீர்கள்; அரசியலில் எவ்வளவு பெரிய தலைவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தமிழ்ச் சான்றோர்க்கு ணையாகார்; காமராசர் எனினும் சரி; அறிஞர் அண்ணா எனினும் சரி; அவர்கள் மறைமலையடிகள் போலும் தமிழ்ச் சான்றோர் களோடு இணைத்துச் சொல்லத் தக்கவர் அல்லர். அவர்கள் பெயரை நிலையத்திற்கு வைக்க முயன்றாலும் எதிர்த்துப் போராடவே செய்வோம். சான்றோரை மதித்துப் போற்றாத நாடு, தன் தகுதியை இழந்து போகும். தாம் வாழுவதற்காகப் பாடித்திரியும் அரசியலாளி போல்பவர் அல்லர் மறைமலை யடிகள் போலும் சான்றோர்; தமிழ்நாடு வாழ. தமிழ் வாழ, தமிழினம் வாழப் பாடித் திரிந்த குயில்கள் அவர்கள்! ஏன் உங்களுக்குத் திறம் இருந்தால் வடநாட்டில் ஒரு நிலையத்தின் பெயரைப் பெருந் தலைவர் பெயராக்குவதற்குப் போராடுவது தானே தமிழ் நாட்டுப் பெருந்தலைவர் பெயர் வடநாட்டிலும் உள்ளது என்று தமிழர்கள் உங்களைப் பாராட்டுவார்களே!

"நாங்கள் எடுத்த முடிவு முடிவேதான்."

"தமிழனத்தின் வசையை வாங்கிக் கட்டிக் கொள்ள முடிவெடுத்து விட்டீர்கள்! உங்கள் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தீய விளைவுகளை உண்டாக்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் இது நல்லதன்று; நன்றி.

"டொக்.

,

-இது 12-2-90 இல் மாலை 5 மணிக்கு நிகழ்ந்த வேலா தொலைபேசித் தொடர்பு ஒன்று. தமிழ்ச் சான்றோர் பெயரை எதிரிட்டு நிற்பாரை நேருக்கு நேர் அழைத்துக் கூறிய அறை கூவல் செய்தி இது! உடனிருந்து கேட்ட செவிகள் ஆகலின்,