உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

காவியத் தடை நீக்கம்

63

1946- இல் வெளி வந்த இராவண காவியம் 1948-இலேயே தடை செய்யப் பெற்றதே! தடை செய்த ஆட்சி,அகன்றது; முகவுரை வழங்கிய அண்ணாவின் ஆட்சி மலர்ந்தது. அந்நூலின் தடை நீக்கப்பட வேண்டும் என வேண்டுகை விடப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலம் அது அவர் தடை நீக்ம் செய்ததுடன் ஆராய்ச்சி அணிந்துரையும் வழங்கினார். 1971 இல் ராவண காவியத்தின் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது. முதற்பதிப்பு தந்தையார் செய்தது; இரண்டாம் பதிப்பு மைந்தர் செய்தது முன்னவர் அச்சுக்குப்பட்ட தொல்லையை பின்னவர்பட்டதும் உண்டு.

வண

இராசன் மின் அச்சகம் என்னும் பெயரில் அச்சகத்தில் (சென்னை) அச்சிடச் சென்றனர். அச்சக அலுவலகத்தில் நாமம் போட்ட முதலியார் படம்! அப்படத்துக்கு உரியவர் மைந்தரே அச்சகம் நடத்தி வந்தார். அவர் இராவணகாவியம் அச்சிடப் போகிறார் என்பதைத் தெரிந்த சிலர் அவர் தந்தையாரின் நாமத்தை (இராமத்தை)க் காட்டி, இந்த நூலை இங்கு அச்சிடலாமா? இவர்க்கு ஏற்குமா? என்றெல்லாம்கூறினர். ஆயினும் "நல்ல வேலைக்கு நாலு இடை டைஞ்சல் ஞ்சல் என்று நினைத்துக் கொண்டு, எடுத்து வைத்த காலை இடறாமல் நடையிட்டுப் பதிப்பித்துத் தந்தார். ஒரு புதிய பார்வை பார்க்க வேண்டுமென்றால், எத்தனை பழைய பார்வைகளையெல்லாம் வெற்றி கொள்ள வேண்டியிருக்கின்றது!

வணிகக் கடமைகளோடு வேலாவின் பொதுப் பணி நாட்டமும் பெருகியது! 1976 இல் குழந்தைகள் விழாவைச் சிறப்புாகக் கொண்டாடினார். அதே ஆண்டு பொங்கல் விழாவைச் சிறப்பாக எடுத்தார். முத்தமிழ்க் காவலரை அழைத்துப் பொழிவு செய்ய வைத்தார். பசவேசர்க்குப் பெரு விழா எடுத்தார். அது இலக்கிய விழாவாகவும், வீரசைவ விழாவாகவும் பொலிவு பெற்றது. பவானியில் பெருமாநகாடு நடத்தினார். வீரசைவ உலக குருக்கள் ஓரைவர்ஒருங்கு கலந்து கொண்ட மாநாடாயிற்று அது. பெங்களூர் அனைத்திந்திய பசவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார் வேலா. தேர்ந்தெடுத் தவர் இந்தியத் துணைத் தலைவர் மாண்புமிகு சட்டி அவர்கள். கருநாடக மாநில மாநாட்டுக்கும் சென்று தனிச் சிறப்புப் பெற்றோர்வேலா.