உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

அவ்வுழைப்பின் பயன் நிறுவன வளர்ச்சியாய், பெருக்கமாய், கொடை வளமாய் - குலவி வருதல், நெருங்கினார் அனைவரும் அறிந்து கொண்டுள்ள செய்தி!

பொதுப்பணி

தம் முப்பத்தைந்தாம் பிறந்த நாளிலே ஒரு தெளிந்த முடிவு எடுக்கிறார் வேலா.

66

வணிகப் பணியோடு பொதுப்பணியிலும் ஈடுபடுதல் வேண்டும். இதுகாறும் என் வாழ்வில் நிகழ்ந்தன எவை? நிகழ வேண்டுவன எவை? அல்லவை அகற்றி நல்லவை கொள்ளலே என் கடைப்பிடி! அவர் எப்படி? இவர் எப்படி? என்று எண்ணு வதன்று என் கடன்! எவர் எப்படியாயினும் நான் எப்படி இருத்தல் வேண்டும் என்பதே என் குறிக்கோள். பிறரினின்று என்னைத் தனித்துக் கொள்ளுதல் நோக்கமன்று. தனித்தன்மையுடையனாக என்னை நிலைபெறுத்தல் வேண்டும்" ஒவ்வோர் ஆண்டுப் பிறப்பும் ஓராய்வுப் பொருளாய் அமைந்தது. இதனை விட்டு விட வேண்டும் என்று வேண்டாப் பழக்கங்கள் ஒவ்வொன்றாய் விடவிட, அவ்விடத்து வேண்டும் நல்லவை புகப்புகக் கண்டு களித்தார். ஒளி புகப் புக இருள் அகன்றோடுதல் போல், மனமாசு அகல அகலத் தூய்தன்மைகள் நிரம்புதல் தெளிந்தார். பின்னாளில் 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" எனவும், "நன்றின்பால் உய்ப்ப தறிவு" எனவும் சொல்லும் மறை மொழி களுக்குரிய மூலப்பகுதிஇப்படி முளையிடுவதாயிற்று.

அன்னையார் பிரிவு

1977 இல் தந்தையார்க்கு நினைவு ஏற்பாடு! அன்னையார் தம் அருமைத் துணைவர் புதைவிடத்திற்கு இரண்டு நாள்களின் முன்னர்ச் சென்று வழிபாடு செய்து வருகிறார். நினைவு நாள் அன்று காலையில் குளிப்பறைக்குப் போய் நீராடி வருகிறார்! பொழுது காலை 5 மணி. தம் உயிர் கொண்டு தம் கணவரைத் தேடிச் சென்று விட்டார்! சரியாகப் பதினான்கு ஆண்டுகளின் பின் கணவர்மறைந்த அதே நாளில் தேய்பிறை ஒன்பான் (நவமி) ஓரையில் மறைந்தார் அன்னை வெங்கிட்டம்மாள்! அவரை விடுத்து எவரையும் வாழ்க்கைத் துணையாக நினைக்கவும் மறுத்த வாழ்க்கைத் துணைக்கு வாய்த்த வாழ்க்கைத் துணை என்பதை மெய்ப்பித்தநாள் அது. அந்நாள் 5-11-77 ஆகும்.