உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

61

சார்ந்த பல நிலையாய் விரிந்து; அப்பணித் திறத்தோடே பொதுப் பணியும் தொண்டும் ஊடையும் பாவுமாய் உருவாகலாயின!

வேலா அரசமாணிக்கனார் நிறுவனம் தந்தையார் பெயரால் 'வேலா' ஆயது. பெயர் சூட்டப்படுபவர் பேரன், பேர்த்தியர்; தந்தை பெயர்கொண்ட அரசமாணிக்கனார் இனி 'வேலா எனவே சுட்டப்பெறுகிறார்.

வேலாவின் பெயரை இதுகாறும் அரசமாணிக்கர் எனக் கூறிவந்தோம். அவரது பள்ளிப் பெயர் ஈ.வே. இராசமாணிக்கம் என்பது அவர் தனித்தமிழ்ப் பற்றாளர்களால் அரசமாணிக்கம் என வழங்கப் பெறுகிறார். அவர்க்கமைந்த பள்ளிப் பெயர்க்கு மன்னர் ஒரு பெயர் உண்டு. பிள்ளைப் பெயராகச் சூட்டிய பெயர் அது; தாத்தாவின் பெயர்; அப்பெயர் 'அர்த்த நாரி' என்பது. பெரியவர் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கம் எக்குடும்பத்திலும் இல்லை. அதனால், பள்ளிக்குச் சுட்டப்பட்ட பெயரே நிலைத்தது. அப்பெயரும் தனித்தமிழ் ஆர்வலரால் தமிழ் வடிவுற்றது. அது 'வேலா' நிறுவனம், வேலா நிலையம் வேலா அங்காடி, வேலா பதிப்பகம் என்னும் பெயரீடுகளால், ஆகுபெயர் சார்த்தி அரசமாணிக்கனாரைக் குறிப்பதாயிற்று. இப்பொழுது வேலா என்றால் சாலும். நூல் தொடக்கச் செய்தியே வேலா தானே! வேலுக்கும் வெற்றிக்கும் உள்ள தொடர்பு எத்தகைய தொடர்பு! வேலும் வெற்றியுமாக அல்லவோ பொருளுணர்ந்து புறப்பட்டது குறளியம்!

செயல் திறம்

பெயர்க்குறிப்பு நிற்க, நாம் வாழ்வுக்குச் செல்வோம்.

வேலா சுறுசுறுப்புக்கு இணை, அவர் சுறுசுறுப்புத்தான்! சோர்வு என்பது அவர் கண்டறியாதது. ஊணை மறப்பார்; உறக்கம் மறப்பார்; ஓய்வை மறப்பார்; உழைப்பிலே ஊன்றுவார். எவரும் அறிந்த,

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்.

என்பதற்கு ஒருமொத்த எடுத்துக் காட்டாகத் திகழ்பவர் வேலா!