உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

கணவன் மனைவியர் வாழ்வில் எத்தகைய முழுதன்பு ஊடகமாக இருப்பினும் கருத்து வேறுபாடு இல்லாமல் தீராதே. அத்தகு வேளைகளில் உண்டாகும் வாழ்வமைதியை மாணிக்கர் கூறுகிறார். அம்மா நீ இப்படி எண்ணுகிறாய்; நான் அப்படி எண்ணுகிறேன்; இவற்றுள் எது சரி என்பதை உன் தோழியர், உறவாட்டியர் என இன்னார் இன்னார் உள்ளார்களே நாம் அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்பேன்; வேண்டாம்; வேண்டாம்; யாரிடமும் கேட்க வேண்டாம்; சொல்ல வேண்டாம்; இது நம்மிருவர் தொடர்பான செய்தி. நீங்கள் சொல்வதேசரியானது என ஒப்புக் கொள்கிறேன்; இனி எதற்கு மற்றவர்களிடம் கேட்க வண்டும்? என்பார்; அவ்வேளையில் "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று' என்னும் வள்ளுவத்தின் முழுதுறு

(C

""

விளக்கமும் கிட்டிய தளிர்ப்பு உண்டாகும் என்கிறார்.

வேலாயுதர் பெரும்பிரிவு

-

-

பாட்டியாய் இருந்தாலும் தாயின் தாங்குதல்அனைத்தும் தாங்கிய இலிங்கம்மாள் 18-12-60 ஆம் நாள் இயற்கை எய்தினார். குடும்பத் தந்தையாய் தாயாய் -ஆசானாய் வழிகாட்டியாய் விளங்கிய வேலாயுதனார்க்கு அகவை 60 ஆம் தொடக்கம். ஒரு சிறு மூதாளரே அகவையால்! பெருமூதாளர் அல்லர்! துணை வியார் மனநலம் சீர் பெற்றுக் குடும்பப் பொறையைத் தாங்கும் ஆற்றலும் பெற்று மகிழ்வு தந்தார் அந்நாள். ஆயினும் அம்மகிழ்வு குடும்பத்தில் ஞநடா வகையில் 9-11-1963 ஆம் நாள் பிறந்தது! அந்நாள், வேலாயுதர் 'பேரா இயற்கை' யுற்ற நாள் ஆயிற்று. ஒளிமிக்க இந்தக் கட்டுடல் எப்படி வீழ்ந்தது. என்று திகைக்கும் வகையில் வீடுபெற்றால் வேலாயுதனார். அரச மாணிக்கனார் அகவை அப்பொழுது 26!

தொழில் நிலை

சிவலிங்கப் புத்தக விற்பனை நிலையக் கட்டம் அண்ணார் சிவலிங்கனார் உடைமை ஆயிற்று.

குடியிருந்த வீடு அரசமாணிக்கனார் உடைமையாயிற்று. வணிக நிறுவனம் வேண்டுமே! வேலா நிறுவனம் 1965இல் எழுந்தது. அப்பொழுது அரசமாணிக்கனார் அகவை 28 குடும்பத் தொழில் அச்சீடு; புத்தகம், பேரேடு சிட்டை முதலியன உண்டாக்கம்; விற்றல்; நாட்காட்டி வெளியிடல் என ஒரு நிலை