உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

65

அச்செயல்களையெல்லாம் தொடர்ந்து செய்தார். தம் உற்றார் உறவினர்கள் ஆகிய சுற்றத்தார் சுற்றப்பட் ஒழுகுதலை வழக்கமாகக் கொண்டார். படிப்புவகை, ஊண்வகை, உடைவகை மருத்துவம் ஆகிய உதவிகளையும் இல்வாழ்வுக் கடமையாகக் கொண்டார். இவ்வகைகளு க்கெல்லாம் மனைவி மக்கள் உறுதுணை

ல்லாமல் இயலுமா? தம் மக்கள் தம் உடன்பிறப்பு என்னும் உணர்வு உண்டாகித் திகழும் போதுதானே புகழ் புரிந்த இல்லறமாகத் திகழும் போதுதானே புகழ் புரிந்த இல்லறமாகத் திகழும்! குழந்தைப் பருவம் தொட்டே வளர்ந்து கல்வியிலும் வணிகத்திலும் பயிற்சி பெற்றுத் தொழில் துறையில் உடனாகித் திகழும் செல்வர் செந்தில்குமார்ஒரு சான்று! அம்மையார் அவர்கள் தங்கை மகனார் அவர்.

ஊரவருள்ளும் ஒரு பழமொழி வழக்குண்டு அது, "வாழாத பிள்ளையை வேலாவினிடம் விடு" என்பது.ஏனெனில் வேலா தரும் பயிற்சியாலும் கண்டிப்பாலும் தக்க திறமையைப் பெற்று விடுவான் என்பதே அது.

இதற்குச் சான்றாகப் பலர் உளர்.

சமயப்புரட்சி

1977 -இல் ஈரோட்டில் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தினார் வேலா. தவத்திரு அடிகளார் பங்கு கொண்டார். அடிகளார் 1974-இல் திருக்குறள் பேரவையைத் தோற்றுவித்துச் செல்லுமிடமெல்லாம் கிளைகளை உண்டாக்கித்தழையச் செய்து வந்த காலம். ஈரோட்டில் மாவட்டக் கிளையைத் தோற்றுவித்தார். வேலாவைப் பேரவை மண்டலச் செயலராக அமர்த்தினார். அதன்பின் சமயக் கூட்டங்களுக்கும் செல்லத் தலைப்பட்டார் வேலா. திருச்சியில் நடைபெற்ற சமயக் வட்டத்தில் பங்கு கொண்டார். அப்போதில், வழிபாட்டுக் டைத்தரகர் கூடாது; அம்முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று தம் கருத்தை முன் வைத்தார் 'காலம் கனியட்டும்' என்று அடிகளார். மேலும், "சைவத்தில் சாதி கூடாது என்பதையும் வீரசைவக் கொள்கை காட்டி வலியுறுத்திப் பேசினார் வேலா. பின்னர் தருமபுரி, ஈரோடு. கோவையில் நிகழ்ந்த வட்டங்களிலும் சமயப்புரட்சி வேண்டும் என்னும் கருத்தை மிக வலியுறுத்தினார்.

வேலாவுக்கு ஏன் சமயப் புரட்சி நாட்டம் உண்டாயது? "பிறப்பொக்கு எல்லா உயிர்க்கும்" என்னும் குறள், வேற்று