உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

மையற்ற ஓருலகை ஒளி செய்து காட்டியது! அதனை வழி செய்து காட்டியது வீரசைவம்!

வீரசைவர் வீட்டுத்திருமணங்களில் தாலி கட்டும் போது மணியடிக்கப்படும். அதன் பின், பூணூல் போட்டிருப்பவர் எவராவது இருந்தால் அவர்கள் வெளியே போய் விடுக" என்று சொல்வர். இவ்வழக்கம் ஐம்பாண் ஆண்டுகளின் முன் வரைதமிழ்நாட்டிலும் நிகழ்ந்து வந்ததே இப்பொழுது, மணியடிப்பும் உண்டு! துணி மறைவிட்டுத் தாலி கட்டும் வழக்கும் உண்டு. 'எழுந்து செல்க' என்பது நாகரிகம் ஆகாது என்னும் எண்ணத்தில் தோன்றிய மாற்றம் இது. வேத நெறி, வருணநெறி, அதனை ஒழிக்கத் தோன்றியது பசவர்கொண்ட வீரசவை நெறி இந்நெறிவேலாவின் முன்னோர் வழிவழியே போற்றிய நெறியுமாம்.

பவானியில் வீரசைவக்குடி சார்ந்த ஒருவர்; படையாட்சி குடும்பச் சார்பை விரும்பினார்; காதலும் முற்றியது; வீரசைவர் குடியினர் வேலாவினிடம் என்ன வழி என வினவினர். இக்கலப்பு இயற்கையானது; தவறெதுவும் அற்றது. இவ்வாறு உண்டாகிய ஒரு கலப்பு மணத்தைப் பெம்மான் பசவர் நடத்தியுள்ளார். மணமகன் தாழ்த்தப்பட்ட இனத்தவன்; மணமகள் பிராமண வகுப்பு, இவர்கள் இலிங்கம் எப்பொழுது கட்டிக் கொள்கிறார் களோ அப்பொழுதே ஒத்த குடியாய் விடுகின்றனர். பிறகு, கலப்பு ஏற்றத் தாழ்வு- என்றேபேச்சுக்கு என்ன இடமுண்டு" என்றார். அத்தீர்ப்பே இம்மணமக்களுக்கும் உரியது என்றார் வேலா. இருசார்பினரும் ஏற்றுப் போற்றினர். இவ்வாறே சேலத்தில் வீரசைவக் குடியொன்றும் கிறித்துவ சமயக்குடி ஒன்றும் காதலாயிற்று.

-

இவ்வாறே பிற பிற இடங்களிலும் நேர்ந்த துண்டு. அவற்றுக்கெல்லாம் பசவர் செய்ததீர்ப்பே பண்பட்ட தீர்ப்பென வேலா முன்னின்று நெறிப்படுத்தினார்.

பிற பொதுப் பணி :

ஈரோட்டில் ஆசிரியர் குடியிருப்பு தோன்றியது. அதில் வீட்டுவசதிக் கூட்டுறவு சங்கம் என்பதோர் அமைப்பு உருவாயிற்று. அதன் இயக்குநராக வேலா தொண்டாற்றினார்.