உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

67

அரிமா அமைப்பிலும் உறுப்பாண்மை கொண்டு கடனாற் றினார். ஆனால் இத்தகைய பணிகள் எல்லாம் திருக்குறள் பணியில் ஊன்றுமுண் நிகழ்ந்தவை. வள்ளுவ நெறியை வாழ்வு நெறியாகக் கொள்ள வேண்டும்

என்னும

குறிக்கோள் உண்டாகிய பின்னர், இதனை நிலைப்படுத்தித் தொண்டு செய்வதே குறியாகக் கொண்டார். வீரசைவப் பிணைப்பையும் விடுத்துக் குறளியத் தொண்டிலேயே தலை நிற்கலானார்.

நாட்காட்டி நற்கொடை:

1967-இல் திருக்குறள் திங்கள் காட்டி வெளியிட்டார் வேலா. அதில்திருக்குறளுக்கு மிக எளிமையான வகையில் நெஞ்சம் கவரும் முறையில் உரை அச்சிட்டிருக்கக் கண்டார் ஒருவர். இவ்வளவு சுவையாகத் திருக்குறள் உரையைத் தரக் கூடுமா என வியந்தார். அக்காட்டியை வெளியிட்டவரைக் கண்டு பேச விரும்பினார். தம் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வேலா நிலையத்திற்கு வந்தார்! உணர்வு மிக்க உள்ளங்கள் ஒரே கருத்தில் உரையாடின.

கிறித்தவ மறைக்கும் இசுலாமிய மறைக்கும் உயர்நூல் திருக்குறள். கருத்துச் சிறப்பு மிக்க தாய்க் கனிந்தது. எனினும் அதனைப் பரப்புவார் இல்லாமல்மறைந்து கிடக்கிறது. அதனைப் பரப்ப நாம் துணிந்தால் பத்துப் பேர் துணைக்கு வருவர்; சிலர் உறுதியாக நிலைப்பர்; இராம கிருட்டிணர் பரப்பம்போலவும் விவேகானந்தர் பரப்பம் போலவும் பலர்க்கு வாழ்வைத் தரும் அமைப்பாகவும் அமையும்.

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்"

ஆம்! இதனைச் சிந்தித்து உலகியலை மாற்றி அமைக்க வேண்டும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

என்பதால் பிறப்பு வேற்றுமை, தொழில் வேற்றுமை

இரண்டும் அற்றது திருக்குறள்.

66

'ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு”