உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

வள்ளுவர் கண்ட பொதுமைத் தனிச்சிறப்பு இது.

இவ்வாறு வந்தவருடன் அலசினர்! உணர்வை உணர்வை மதித்தது! உணர்வு உறவானது பின்னே குறளியத்திற்கு உறுதித் துணையும் ஆனது. தேடி வந்து வேலாவைக் கண்டது சிந்தனைச் செம்மல்கோபி. கு.ச. ஆனந்தனார்!

குறளியம்

பசுமைப் பணி மன்றம் என்பதோர் அமைப்பு அவ்வமைப்பு நிறுவனர் வேலா. பொங்கல் விடுதி நிலவுக் கூட்டம் ஆகியவற்றை நிகழ்த்தி வந்த மன்றம். அதன் பொருட் பொறுப்பு அனைத்து வேலாவையே சார்ந்து இருந்தது. அதன் 1979-ஆம் ஆண்டுப் பொங்கல் விழாவின்போது, 'குறளியம்' என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்று தொடங்க வேண்டும் என்னும் கருத்து வேலாவுக்கு எழுந்தது. முன்னரே ஆனந்தர் அணுக்கம் உண்டாயிற்றே! அவர் அரசியல் ஈடுபாட்டாளராக மட்டும் இருந்த காலம் அது. அவர் தம் மூளைக் கூர்ப்பும் ஆற்றலும் திருக்குறள் வழிக்குத் திருப்பப் பட்டால் எத்துணையோ நல்விளைவுகளை நாடும் பொழியும் பெறக் கூடுமே என எண்ணினார். அவ்வெண்ணத்தால், அவ ரொடும் கலந்து குறளியம் தொடங்குதலை உறுதிப்படுத்தினர். வேலா ஆசிரியராகவும், ஆனந்தர் சிறப்பாசிரியராகவும் கடனாற்றுவதெனவும் முடிவு கொண்டனர். முதல் இதழைச் சிறப்பாகக் கொண்டு வரவேண்டும் என்றும், அதன் வெளியீடு சீரிய விழாக் கோலம் கொண்டு விளங்க வேண்டும் என்றும், ஆட்சியாளர் அறிஞர்கள் வாழ்த்துரைகளும் கட்டுரைகளும் திகழ வெளிவர வேண்டும் என்றும் திட்டமிட்டனர். ஆள்வோரைக் காணுதற்குச் சென்னைக்குச் சென்றார் வேலா.

குறளியத்திற்குத் திருக்குறளார் துணை வேண்டும் என விரும்பினார் வேலா. அவரைக் கண்டு அவரோடு தலைமைச் செயலகம் சென்றார். அமைச்சர் முத்துசாமியைக் காண வேண்டும் என்பது கருத்து. முதற்கண் அந்நாள் சட்டமன்றத் தலைவர் இராசாராம் அவர்களைக் கண்டு உரையாடிக் கொண்டிருக்கும் போதே, முதல்வர்ம.கோ.இரா. அவர்கள் எதிர்பாராத வகையில் ஆங்கு வந்தனர். அவரைப் பல்கால் பார்க்க வாயாத வாய்ப்பு, தானே வந்தது கண்ட திருக்குறளார் தனி மகிழ்வுற்றார். சட்டமன்றத் தலைவர் முதல்வர்க்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் 'குறளியம்' இதழ் தொடங்க இருப்பது