உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

69

குறித்தும் கூறினார். மகிழ்ந்தார் முதல்வர். வாழ்த்தும் கூறினார்; குறளிய வெளியீடு சென்னையில் இருந்தால் தாம் கலந்து கொள்வதாகக் கூறினார். வோலாவின் உள்ளெண்ணம் குறளிய இதழ் வெளியீடு ஈரோட்டிலேயே நிகழ வேண்டும் என்பதாக இருந்தது.ஏனெனில் தந்தை பெரியார் தொடங்கிய குடியரசு எப்படி ஈரோட்டில் தொடங்கப்பட்டதோ அப்படியே இருக்க வேண்டும் என்னும் எண்ணமேயாகும்; முதல்வர் தமக்கு ஈரோட்டுக்கு வந்து வெளியிடும் நிலையில் பணிநிலை இடம் தாராமையால் இனிய வாழ்த்து உரைத்து அரசின் சார்பில் அமைச்சர் காளிமுத்து, முத்துசாமி ஆகியவர்கள் கலந்து கொள் வதற்கு அவரே முன்னின்றுரைத்தார்.

வள்ளுவர் கோட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருக்குறள் பணி குறித்தும் கலந்துரையாடினார். திருக்குறளார் தம் கருத்து களையும் கேட்ட முதல்வர் திருக்குறள் மையம் தொடங்க முடிவு செய்தார். அற்றைச் சந்திப்பும் கலந்துரையாடலும் வேலாவுக்குப் பெருமகிழ்வைத் தந்ததுடன், திருக்குறளாரின் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் பரப்பாண்மைப் பணியமர்த்த வாய்ப்புக்கும் ஏந்தாயிற்று! அதன் பின்னர்த் தோன்றியதே திருக்குறள் நெறி பரப்பு மையம்!

15-8-1980 வெள்ளி மாலை 6-30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் திருக்குறளார் தலைமையில் குறளிய வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தவத்திரு அடிகளார், அமைச்சர்கள் கா. காளிமுத்து, சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாளர்கள் (எஸ்.எஸ்.எம்.) சுப்பிரமணியம், செங்கோட்டையன், பழனி சாமி, கந்தசாமி, முருகு சுந்தரம் ஆகியோர் வாழ்த் துரைத்தனர். வேலா வரவேற்றார். ஆனந்தர் நன்றியுரைத்தார்.

குடியரசு இதழ் தொடங்கி வைத்தவர் தவத்திரு ஞானியார் அடிகள் என்பதை வேலா அறிவார். அதனால் தம் காலத்து ஞானியார் அடிகளாகவும் அப்பரடிகளாகவும் விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரே இதழைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று அவாவினார். அவ்வாறே நாட்டு விடுதலை எனப் பெயரளவில் பெற்றிருந்தாலும் மூளைச் சலவை செய்யப் பட்ட தமிழ் மக்கள் அறிவு விடுதலையோ, வாழ்வியல் விடுத லையோ, சாதிமத விடுதலைகளோ, கண் மூடிப் பழக்க விடுதலை களோ பெறாமையால் அவற்றைப் பெறத்தக்க குறிக்கோளை