உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நினைவுறுத்தும் வகையில் நாட்டு விடுதலை நாளாகிய 15-8-80-- ஆம் நாளையே குறளியம் இதழ்த் தொடக்க நாளாகக் கொண்டார். எங்கு ஒன்றையும் பொருந்த எண்ணிப் பொருள் நலம் சிறக்கச் செய்ய வல்ல செய்நேர்த்தியர் வேலை என்பதை நினைவுறுத்தும் செயற்பாடுகள் இவை.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்"

என்னும் குறிக்கோளை முன்வைத்து, கலை இலக்கிய அறிவாண்மைத் திங்கள் இதழ் குறளியம் வெளிவந்தது. அதன் ஆண்டு 'வேல்' என்றும், திங்கள் 'வெற்றி' என்றும் தொடங்கப் பெற்றது.

முதல் வேல் எவர்க்குப் படைக்கப் பெற்றது. வேலாயுதர்க்கே படைக்கப் பெற்றது. "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்" யன்றோ!

66

‘கடமையை உணர்த்தும் கலங்கரைவிளக்கம்

உழைப்புக்கு ஊன்றுகோல் ஊக்கத்தின் திறவுகோல் மூளும் அறப்பணிக்கு முன்னிருக்கும் நடை

நெறிதந்த தந்தையார் நீத்தார்”

அ. வேலாயுதனார்

நினைவுக்குக் குறளியத்தின் முதல் மலரைப் படைக்

கின்றோம்"

என்பது படையல் மொழி!

"குறளியம் பிறந்தது... எப்படி?" என்பதை முதல் இதழிலேயே விளக்கமாக வரைகிறார் வேலா (15-8-1980)

மாசனப் பள்ளியில் படித்தது, அதன் தலைவராகப் பெரியார் இருந்தது, முத்தமிழ்க் காவலர் பொழிவு கேட்டது, வேலாயுதனர்க்கு அன்பராக விளங்கிய புலவர்கள் தொடர்பு, பேராசிரியர் இலக்குவனார் அன்பு, நாற்பதாம் அகவை முதல் செய்யத் தொடங்கிய பொதுத் தொண்டு, குறளுக்கோர் இதழ் வேண்டுமென்னும் அடிகளார் வலியுறுத்தல் இன்னவை யெல்லாம் குறளியம் பிறக்கச் செய்த தூண்டல்கள் என்பதை விளக்குகிறார். தம் உள்மனச் சுட்டலையும் ன்னதென்ன விரித்தெழுதுகிறார்!

-